33.2 C
Chennai
Friday, Jun 19, 2026
அழகு குறிப்புகள்முகப்பரு

முகப்பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் முகப்பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.

முகப்பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்ய வேண்டும்
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம். அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு – இவை மூன்றுமே முகப்பருக்களாகப் பிரதிபலிக்கும். இதைத் தவிர, அதிக மன உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.

நீண்ட கால சைனஸ் தொல்லைக்கான அறிகுறியாகவும் முகப்பபரு உண்டாகும். பி.ஸி.ஓ.டி. எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கும் பரு உண்டாகலாம். சிலருக்கு, பல்லில் சொத்தை, நோய்த்தொற்று இருந்தாலும்கூட, அதன் வெளிப்பாடாகப் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.

திருநீற்றுப் பச்சிலையை அரைத்து, பருக்களின் மீது தடவ, ஓரளவு கட்டுப்படும். இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணத்தை, சுடுதண்ணீரில் கலந்து முகத்தைக் கழுவலாம். எண்ணெய்ச் சருமத்தினருக்கு, பருக்கள் பழுத்து இருக்கும். இவர்கள், திரிபலா சூரணத்தைக் குழைத்து, முகத்தில் ‘பேக்’ போட்டு, 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், நல்ல பலன் இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சருமத்தினர் மட்டுமே இதைப் போடவேண்டும்.

அதிமதுர வேரைப் பொடித்துக் குழைத்து, பருக்கள் மீது போடலாம். தொடர்ந்து போட்டு வர உதிர்ந்துவிடும். இந்தப் பொடியை, பயத்த மாவில் கலந்து, குழைத்து ‘பேக்’ போட்டு, சில நிமிடங்கள் காயவிட்டுக் கழுவலாம். அதிமதுரத் தூளை தேநீர் போலக் கொதிக்கவைத்து அருந்தலாம். ஹார்மோன்களைச் சீராக்கி, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும். அஜீரணத்தைப் போக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

உணவில் மாற்றம்!

பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை. ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

மருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எந்த பவுடரும் போடக் கூடாது. அடிக்கடி சோப் மாற்றுதல், ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவுதல், டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.

டீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்கவைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/ உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நலங்கு மாவு

சோப்புக்குப் பதிலாக, இந்த நலங்கு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். ஒரு கிலோ பாசிப் பயறுடன், 50 கிராம் சந்தனம் மற்றும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு தலா 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போக அரிசி (இவை அனைத்துமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) தலா 200 கிராம் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துப் பயன்படுத்தலாம்.

Related posts

வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள்!

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

வெளிவந்த தகவல் ! பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவரும் வெளியேற போகிறாரா ?

nathan

சந்தனம் ஏன் இவ்ளோ காஸ்ட்லியா இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan

உங்க குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுபோக்கு ஏற்படுதா?

nathan

பாதங்கள் பளபளக்க வேண்டும் என்று செய்யும் இந்தப் பராமரிப்பு உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும்…..

nathan

விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் ரூ.1,001 பரிசு அறிவித்த அர்ஜுன் சம்பத்

nathan

வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு

nathan