29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்முகப்பரு

பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க நிரந்தர சிகிச்சை!…

சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை

முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம்.

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள்.

தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை ஆகியவை முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன.

ஆனால் எங்கு செல்வது? என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.

இந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும்.

இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.

முகப்பரு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது.

அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.

பருத் தழும்பு:

பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

Related posts

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

nathan

ஐந்து ராசிகளுக்கு அடிக்கும் பேரதிர்ஷ்டம்! உங்க ராசி இருக்குதா?

nathan

முட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்

nathan

12 ராசிக்கும் தமிழ் பிலவ வருட புத்தாண்டு பலன்கள்.. திடீர் அதிர்ஷ்டம் என்ன?

nathan

கிராம்பு எண்ணெய் (Clove Oil) சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயதான அறிகுறிகளை அகற்ற கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

nathan

வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது எப்படி தெரியுமா?

sangika

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தழும்புகளை காணாமல் போக செய்யும் துளசி பேஸ் பெக் !

nathan

பரு, தழும்பை அழிக்க முடியுமா?

nathan

அழகான பாதங்களுக்கு…

nathan