28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
kalan
அழகு குறிப்புகள்

முகப்பருக்களை ஒழிக்க காளான்!…

பலவித காய்கறிகள் இருந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். நீண்ட நாட்கள் நோயே இல்லாமல், இளமையாக இருக்க ஏதேதோ வழிகள் உள்ளது. ஆனால், நமக்கு எப்போதுமே “சிம்பிளாக இருக்க கூடிய வழிகள் தான் நமக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் ஒரு சாதாரண காயை வைத்தே இந்த பலனை அடைய முடியும் என தற்போதைய அறிவியல் கண்டறிந்துள்ளது.

சாதாரண காயை வைத்தே நம்மால் நீண்ட காலம் இளமையாக இருக்க முடியும் என்பது உண்மையிலே ஆச்சரியமான விஷயம் தான்.

இந்த காயை பல இடங்களில் எளிமையாக காண முடியும். இதில் பல வகைகள் இருந்தாலும் சமைத்து சாப்பிட கூடிய உணவு வகையை சார்ந்தவையில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும்.

இந்த ஒரு காயை வீட்டில் வைத்திருந்தாலே உங்களுக்கு என்றும் இளமை என்பது உறுதி. இனி இந்த காயின் முழு விவரத்தையும், எப்படி இது மிக இளமையாக வைத்து கொள்கிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

எந்த காய்?

செலினியம், வைட்டமின் டி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், காப்பர், பொட்டாசியம் போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்த உணவுதான் காளான்.

மற்ற உணவு வகைகளை காட்டிலும் இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. சமையலுக்கு பயன்பட கூடிய காளான், நாம் நினைப்பதை விடவும் அதிக நன்மைகள் கொண்டது.

வறண்ட சருமம்

நமது முகம் வறட்சியாக இருந்தால் மிக சீக்கிரத்திலே வயதாகி விடும். முக வறட்சியை நீக்கவும், ஈரப்பதமான சருமத்தை பெறவும் காளான் உதவும்.

காளானை உணவில் சேர்த்து உண்டால் இவற்றில் உள்ள தாதுக்கள் சரும வறட்சியை குறைக்கும்.

kalan

பருக்கள்

முகப்பருக்களை ஒழிக்க என்னென்னவோ வழிகளை கண்டுபிடிக்கும் உங்களுக்கு மிக சுலபமான வழி ஒன்று உள்ளது. அது வேறெதுவும் இல்லை.

காளான் வழி தான். காளானை வாரத்திற்கு 1 முறையாவது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே பருக்கள் மிக வேகமாக தடுக்கப்படும்.

முடி உதிர்வு

கொத்து கொத்தாக முடி உதிரும் பிரச்சினை உங்களுக்கு உள்ளதா? இனி இந்த பிரச்சினையை தீர்க்க காளான் இருக்கிறது.

பல்வேறு ஊட்டசத்துக்கள் இதில் நிரைந்திருப்பதால் முடியின் வேர்களை ஊட்டம் அளித்து விரைவாக வளர செய்யும். அத்துடன் முடி உதிர்வையும் தடுக்கும்.

என்றும் இளமை

நீண்ட காலம் இளமையாக இருக்க இந்த எளிய உணவான காளான் உதவும். இவற்றில் உள்ள அதிக அளவிலான காளான் தான் இதன் முழு பயன்களுக்கும் காரணம்.

முகத்தை இளமையாக வைப்பதோடு செல்களை எப்போதுமே புத்துணர்வுடன் வைக்கவும் இது உதவுகிறது.

வெண்மையான சருமம்

காளானில் இயற்கையாகவே வெண்மையை அதிகரிக்க கூடிய கோஜிக் அமிலம் உள்ளது.

இது முகத்தில் இருக்க கூடிய கரும்புள்ளிகள், சரும பாதிப்புகள் போன்றவற்றை தடுத்து இயற்கையான வெண்மையையும் பொலிவையும் தரும்.

சரும பிரச்சினைகள்

உங்கள் முகத்திற்கு இனி எந்தவித பிரச்சினைகளும் உண்டாகாமல் இருக்க காளான் ஒன்றே போதும்.

வாரத்திற்கு 1 முறையாவது உணவில் காளான் சேர்த்து கொண்டாலே உங்கள் முக அழகு கெடாமல் இருக்கும்.

மேலும் மேனியில் ஏற்படும் பாதிப்புகளையும் இது தடுக்கும்.

Related posts

தனுஷை வெளுத்து வாங்கியுள்ள நீதிபதி- ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

முகத்துக்கு சூப்பர் டிப்ஸ் ! !

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள் || waxing after skin irritating clear tips

nathan

காலையில் வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்

nathan

skin care tips, தேமல் பிரச்னைக்கு தீர்வை அளிக்கும் இயற்கை பொருட்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்.. புருவம் அடர்த்தியாக வளர இயற்கை வழிகள்

nathan

நீங்கள் அறிய வேண்டியவை SPF மற்றும் டே க்ரீம்ஸ் பற்றி

nathan

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan