29.5 C
Chennai
Saturday, May 24, 2025
colagine facial
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்!…

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.

சரும சுருக்கத்தை தடுக்கும் கொலாஜன் பேஷியல்

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.

நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும். வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும்.

colagine facial

இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது.

ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம்.

வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.

 

கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் ‘கட்’ செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது.

இதை முகத்தில் போடும்பொழுது ‘ப்ரெஷ்ஷான லுக்’ கிடைக்கும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.

தற்பொழுது heat maskம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும்.

தோல் நல்ல பளிச்சென்று இருப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும்.

கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது.

முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் இந்த முறையைக் கடைப்பிடித்தால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்கப்படுவீர்கள்.

அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேராவது, ‘எக்ஸ்க்யூஸ் மீ! எந்தக் காலேஜில் படிக்கிறீங்க?’ என்று கேட்கப் போகிறார்கள்!

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

கோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக்க டிப்ஸ்

nathan

ஐந்து ராசிகளுக்கு அடிக்கும் பேரதிர்ஷ்டம்! உங்க ராசி இருக்குதா?

nathan

உங்களுக்கு எத்தன முறை கழுவினாலும் முகத்துல எண்ணெய் வழியுதா? அப்ப இத படிங்க!

nathan

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருக்கா? இதோ எளிய நிவாரணம்…

nathan

நீங்கள் நெஞ்சு சளியால் மிகவும் அவதி படுகிறீர்களா ! பாட்டி வைத்தியத்தை உடனே செய்யுங்க !

nathan

இந்த ஒரு பொருளை கொண்டு இழந்த அழகை இரவில் மீட்கலாம்! எப்படி தெரியுமா?

nathan

ஆரஞ்சுத் தோல் எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்

nathan

குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க!

sangika