அரிசியை கொதிக்க வைக்கும் பொழுது கெட்டியான நீர் கிடைக்கும். இதை தான் கஞ்சி, வடித்த நீர் என்றுக் கூறுவோம்.பெரும்பாலும் இதை மாட்டுக்கு ஊத்தி விட்டு வெறும் அரிசி சக்கையை நாம் சாப்பிடுவோம்.
தோல் மருத்துவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களின் படி இந்த கஞ்சி நீரை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தலாம். ஏனென்றால் இது அதிக அளவிலான கனிமங்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது.
இந்நீரை பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள பலப் பெண்களால் அழகு சாதணப் பொருளாக பயன்படுத்தினா். இதில் வைட்டமின் B நிறைந்துள்ளது.
ஃபேஸ் பெக்: அரிசி-ஐ கொதிக்கவைத்த நீரை வடித்து ஆரவைத்துக்கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் ஃபேசியல் பண்னது போல் முகம் மின்னும்.
மேலும் இதனை தினசாி உபயோகிப்பதின் மூலம் முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காணப்படும்.இரவு தூங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் முகத்தில் போட்டுக் கொள்ளலாம்.
குக்கரில் சாதம் வைப்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். வேறு விதமாக பயன்படுத்தும் முறை இதோ.
நேட்சுரல் ஸ்கிரப்: தயிருடன் ஒருபிடி அரிசியை மிக்சியில் கொரகொர வென அரைத்துக்கோள்ளுங்கள். இதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் பததில் கலந்து முகத்தில் 5நிமிடங்கள் ஊரவைத்து மசாஜ் செய்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.மேலும், இதை முகத்தில் அப்லை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளருவதுடன் சருமத்தை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.