இன்று பல பெண்கள் முடியை நேராக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முடியை நேர்படுத்துவதனால் அவர்கள் விரும்பியவாறு அழகுபடுத்திக் கொள்ளலாம். இதனால் அவர்களிம் முழு அழகிலும் மாற்றத்தைப் பார்க்க முடியும்.
அழகு நிலையங்களில் இரசாயணப் பதார்த்தங்களைப் பயன்படுத்தி முடியை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நேராக்குகின்றனர். ஆனால் இதன் தன்மையை அதனை பராமரிப்பதைப் பொறுத்தே பேண முடியும்.
முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்:
1. முடியை பராமரிக்கும் பொருளை சரியாக தேர்ந்தெடுத்தல்.
இரசாயணப் பதார்த்தங்களை பயன்படுத்தி நேராக்கிய முடியினை அவர்களால் பரிந்துரைக்கப்படும், சிறப்பான சம்போ கண்டிஸ்னர் கொண்டு கழுவுவது சிறந்தது. ஏனெனில் இரசாயண சிகிச்சை மூலம் முடியின் கட்டமைப்பு முழுவதுமாக மாறி விடும்.
2. வெப்பத்தை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்த்தல்.
இரசாயண பதார்த்தங்கள் பயன்படுத்தி இருப்பதனால் முடியின் தன்மை மிகவும் மென்மையாகி விடும். அதனால் டிரையர் பயன்படுத்தி முடியை உலர வைத்தல், சூடான நீரினால் முடியைக் கழுவுதல் போன்றவை முடியை மேலும் பாதிப்படையச் செய்து உதிர வைக்கும்.
3. ஸ்பாக்கு செல்லுதல்.
முடியின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் மேம்படுத்த குறைந்தது மாதத்தில் ஒருன் தடவையாவது ஸ்பாக்கு செல்லுதல் அவசியமானது. ஆனால் இவற்றால் பண செலவு அதிகமாகும்.
ஆனால் நீஙகள் வீட்டிலேயெ நீங்களே ஸ்பா கிறீம் பயன்படுத்தி சுயமாகச் செய்வதும் வரவேற்கத்தக்கது.
4. தலையைச் சுத்தம் செய்தல்.
தலையைச் சுத்தம் செய்யும் போது கிளீங்கிற்காக பயன்படுத்தும் பொருட்களை நேரடியாக தலையில் பூசுவது மிகவும் சிறந்தது.
5. குறித்த கால இடைவெளியில் முடியை வெட்டுதல்.
முடியின் நுனிப்பகுதி உடைவது என்பது பொதுவான முடி பாதிப்பு. எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதாவது 4 அல்லது 6 மாத இடைவெளிகளில் முடியின் நுனிப் பகுதியை வெட்டுவதனால் முடியினை பாதுகாக்க முடியும்.
6. கண்டிக்ஷ்னிங்.
முடிக்கு இரசாயணப் பொருட்களால் சிகிச்சை எடுத்துக் கொண்டதனால் சரியான கண்டிக்ஷ்னிங் பயன்படுத்துவது அவசியமானது. ஒலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் கல்ந்து சூடாக்கி அதனை பயன்படுத்தி முடிக்கு மசாஜ் செய்வதனால் முடியின் ஆரோக்கியம் பேணப்படும்.
7. முடியைப் பாதுகாத்தல்.
வெளியே செல்லும் போது சூரியக் கதிர்களில் இருந்தும் சூழல் மாசுக்களில் இருந்து முடியினைப் பாதுகாப்பது அவசியமானது. எனவே ஸ்கார்வ் அல்லது தொப்பி அணிந்து வெளியே செல்வது சிறந்தது.
அதே போன்று நீச்சலுக்குச் செல்லும் போது சவர் கப் அணிந்து செல்வது அவசியமானது.
8. அடிக்கடி முடியைக் கழுவுவதை தவிர்த்தல்.
அடிக்கடி முடியைக் கழுவுவதைத் தவிர்த்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கழுவுவது சிறந்தது. இதனால் முடியில் உள்ள ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கலாம்.
9. ஊட்டச்சத்துள்ள உணவு
முடியின் ஊட்டத்திற்கு அவசியமான புரோட்டின் கிடைக்கக் கூடிய உணவுகளான முட்டை மீன் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியமானது