banana1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்!…

வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். அப்படி நல்ல பலன் தரும் செய்முறைகளை இப்போது காணலாம்.

வாழைப்பழத்தோலுடன் பால் :

பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.

அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

banana1

வாழைப்பழ தோல் மற்றும் தேன்:

இரண்டையும் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

தினமும் ஒருதடவை இப்படி செய்தால், முகப்பருக்களை போக்கலாம். சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்கவைக்கலாம்.

சரும வறட்சியை கட்டுப்படுத்தலாம். முகப் பருவால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம்.

கற்றாழை இலை ஜெல்லுடன் வாழைப்பழ தோல்:

இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

வாழைப்பழ தோல் மற்றும் மஞ்சள் தூள்:

இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும்.

இரண்டு நாட் களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

ரோஸ் வாட்டருடன் வாழைப்பழ தோல்:

இக்கூழை தடவி 15 நிமிடம் ஊரவிட்டு பின் கழுவினால் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.

Related posts

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! “மரு”வை அகற்ற சுலபமான வழி!

nathan

முகப் பூச்சுகள் சிறிய குறிப்பு

nathan

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்!முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் உப்பு

nathan

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

சரும நிறத்தை மெருகூட்டச் செய்யும் 5 குறிப்புகள்!

nathan

ஈஸியாக வெள்ளை ஆகலாம்! தினமும் இரவில் தூங்கும் முன் இதை செய்திடுங்கள்:

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika