30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகம் பளபளப்பாக இருக்க சிறந்த டிப்ஸ்!….

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்துதலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

* நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.

* திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

* தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

* ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.

* புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.

* பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

* பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

* முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

* காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பாத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.

Related posts

உங்க சருமத்தை பிரகாசிக்க வைக்க… இந்த 7 பொருட்கள் போதுமாம் தெரியுமா?

nathan

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan

ஆண்களே! பெண்கள் ஏன் கோபம் அடைகிறார்கள் தெரியுமா?…

sangika

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

சரும கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்ய போறீங்களா?

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

அழகான பாதங்களுக்கு…

nathan

இயற்கை வழிகளின் மூலமும் சருமத்தில் தோன்றும் முதுமைக்கான அறிகுறிகளைப் போக்கலாம். சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால் போதும்.

nathan

பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து!! சந்தேக புத்தியால் நடந்த விபரீதம்

nathan