27.1 C
Chennai
Saturday, May 24, 2025
அழகு குறிப்புகள்மணப்பெண் அழகு குறிப்புகள்

பெண்ணிற்கு ஆண்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ்!…

இந்திய கலாச்சார முறைப்படி திருமணம் என்பது மிக முக்கிய சடங்காக கருதப்படுகிறது. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது பலவித மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் நிச்சயம் நிகழும். திருமணம் ஆக வேண்டுமென்றால் அதற்கும் சிலபல சடங்குகள் இங்கு உள்ளது.

முறைப்படி மாங்கல்யம் அணிவித்து அந்த பெண்ணுடன் தனது வாழ்க்கையை மேற்கொள்ளலாம். இதே முறை இந்தியா முழுவதும் பலவிதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தம்பதிகளாக தங்களது வாழ்வை தொடங்கும் அந்த நாளை எண்ணி பலரும் காத்திருப்பார்கள். இப்படிபட்ட நாளுக்காக பெண்கள் ஒரு விதத்தில் தன்னை அலங்கரித்து கொள்வார்கள்.

இது போன்று ஆண்களும் தன்னை அலங்காரம் செய்து கொள்வார்கள். இருவரில் இன்றைய கால கட்டத்தில், பெண்கள் தான் தங்களை அதிக அளவில் மெருகேற்றி கொள்கிறார்கள்.

இந்த பதிவில் உங்களது இணையராக வர போகும் பெண்ணிற்கு நீங்கள் திருமண நாளன்று கொடுக்க கூடிய 7 டிப்ஸ் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

wed 1

அழகோ..அழகு!

மற்ற நாளில் தன்னை பற்றி கவலைப்படாத பெண்கள் கூட திருமண நாளன்று சற்று கூடுதலாகவே தன்னை அலங்காரம் செய்து கொள்வார்கள். பெண்களை மண கோலத்தில் பார்க்கவே பல ஆண்கள் தவமாய் தவம் இருப்பார்கள்.

மண கோலத்தில் மிகவும் அழகாக தெரிய பெண்கள் ஒரு சில விஷயங்களை கடைபிடித்தாலே போதும்.

இயற்கை!

இன்றைய கால கட்டத்தில் இப்படி அழகு செய்து கொள்ளுதலே மிக பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. ஆனால், இவர்களில் பலரும் வேதி பொருட்கள் அதிகம் நிறைந்த மேக்கப் பொருட்களை உங்களுக்கு திணிக்க பார்ப்பார்கள்.

எப்போதுமே திருமண நாளன்று இயற்கை பொருட்கள் அதிகம் நிறைந்தவற்றையே பயன்படுத்த உங்கள் இணையாக வருபவருக்கு சொல்லுங்கள்.

பேய் மாதிரி வேணாமே!

சாதாரணமாக இருக்கும் போதே திருமண பெண் மிகவும் அழகாக மின்னுவார்கள். ஆனால், திருமண நாளன்று மேக்கப் என்கிற பெயரில் மூச்சில் பூதம் போன்று மேக்கப் போட்டு விடுவார்கள்.

இதை ஒரு போதும் செய்ய வேண்டாம் என உங்களின் அன்பிற்குரிய காதலிக்கு தெரிவியுங்கள்.

மினுமினுப்பு!

சில திருமணங்களில் இது போன்று மினுமினுக்கத்தக்க உடைகளை பார்த்திருப்பீர்கள். உண்மை என்னவெனில், இது போன்ற உடைகள் பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பான தோற்றத்தை தராது.

ஆதலால், தேர்ந்தெடுக்கும் போது எப்போதுமே இது போன்ற உடைகளை தவிர்த்து விடுங்கள்.

தூக்கம்

திருமண நாளன்று எதை எதையோ நினைத்து மனதை குழப்பி கொள்ளாதீர்கள். இது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். ஆதலால், நன்றாக தூங்குங்கள். அப்போது தான் முகம் பார்ப்பதற்கு தேவதை போல இருக்கும்.

தண்ணீர்

எப்போதுமே போதுமான அளவு நீரை அருந்துங்கள். அதுவும் திருமண நாளன்று அதிகமாக நீர் அருந்தினால் அது உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்துடன் திருமண நாளன்று சிறப்பான உடல் நலத்தை இது உண்டாக்கும்.

மன நிலை

எவ்வளவு தான் வெளியில் மேக்கப் போட்டாலும், உங்கள் மனம் நிம்மதியாகவும், மன நிலை சீராகவும் இருந்தால் மட்டுமே திருமண நாளன்று ஜோராக உங்களின் காதலி இருப்பார்.

எனவே, இந்த 7 டிப்ஸ்களை நினைவில் வைத்து கொண்டு சிறப்பான நாளாக உங்களின் திருமண நாளை மாற்றுங்கள்.

Related posts

கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா?

nathan

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

உங்களுக்கு தெரியுமா அஜித் மீது ரசிகர்கள் அதிக அன்பு வைக்க காரணம் இந்த 5 விஷயம் தான்.!

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: இதோ சில குறிப்புகள் உங்களுக்கு!

nathan

முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

மென்மையான கைகளை பெறுவதற்கு……

nathan