31.9 C
Chennai
Friday, May 31, 2024
dryskin
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

முகம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. முகத்தை வெண்மையகவும் இருக்க நாம் என்னவேணாலும் செய்யுவோம். அதோடுமுகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரும்புள்ளிகள், முக வறட்சி ஆகியவற்றை நீக்கவும் நாம் பலவித கிரீம்களை பயன்படுத்தவும்.

இப்படி வேதி பொருட்களை தவிர்த்து நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் நமது முகத்தின் பிரச்சினைகளை குணப்படுத்தி விடலாம். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து இதற்கு அருமையான தீர்வை தந்து விடலாம். குறிப்பாக முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இந்த கிழங்கு நல்ல தீர்வை தருகிறதாம். சரி, வாங்க எப்படி இதை செய்வது என்பதை இனி தெரிந்து பயன் பெறுவோம்.

வறட்சியை குறைக்க

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? இதனை சரி செய்ய இந்த குறிப்பே போதும். இதற்கு தேவையான பொருட்கள்.. யோகர்ட் 1 ஸ்பூன் ஓட்ஸ் 1 ஸ்பூன் சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி

dryskin
concept of cosmetic skin care.

செய்முறை :-

முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஓட்ஸ் மற்றும் யோகர்ட் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி விடும்.

வெண்மையாக வைக்க

முகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து முகத்தில் நேரடியாக பூசவும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தின் கருமையை குறைத்து வெண்மையாக மாற்றி விடும் தன்மை கொண்டது. அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளையும் அகற்றி விடும்.

எண்ணெய் வடிதலுக்கு

முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால் அவை பருக்களுக்கு வழி வகுக்கும். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி தர இதனை பயன்படுத்துங்கள். இதற்கு தேவையானவை… சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

வள்ளி கிழங்குடன் தேன் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள அந்தோசைனின் முகத்தின் கருமையை நீக்குவதுடன் எண்ணெய் வடிதலையும் குறைக்கும்.

கண்கள் வீங்கினால்…?

எப்போதும் கணினியை பயன்படுத்துவோர்க்கு கண்கள் வீங்கிய படி இருக்கும். இந்த பிரச்சினைக்கு தீர்வை தர வள்ளி கிழங்கு போதுமே. வள்ளி கிழங்கை வேக வைத்து இரண்டு பங்காக அரிந்து கண்களின் மேல் வைத்து கொள்ளவும் 20 நிமிடம் கழித்து இதனை எடுத்து விடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் குறைந்து விடும்.

காரணம் என்ன..?

முகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை சர்க்கரை வள்ளி கிழங்கு தருவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. அதாவது, இவற்றில் உள்ள வைட்டமின் சி, டி, இரும்பு சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் முதன்மையான காரணமாக உள்ளது. எனவே, இதனை சாப்பிட்டாலும் அப்படியே முகத்தில் பூசினாலும் நல்ல பலனை தரும்.

Related posts

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

நீங்களே பாருங்க.! சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டிச்சென்ற தல அஜித்

nathan

சருமம் மென்மையாக இருக்க…சில டிப்ஸ்

nathan

பிகினி உடையில் போட்டில் புட் போர்ட் அடித்த காஜல் அகர்வால்

nathan

பாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரின் அழகின் ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா பூசணியை வைத்து இப்படியெல்லாம் கூட இளமையான அழகை பெறலாமா…?

nathan

மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

nathan

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan