32.1 C
Chennai
Saturday, Mar 14, 2026
prown
அசைவ வகைகள்அறுசுவை

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

தேவையான பொருட்கள்

இறால் – 500 கிராம்,
வெங்காயம் – 2 (நறுக்கியது),
பூண்டு – 3 பற்கள்,
இஞ்சி – 1 இன்ச்,
பச்சை மிளகாய் – 3,
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்,
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது),
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்.

prown
எப்படிச் செய்வது?

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து, அதனை இறாலுடன் சேர்த்து, அத்துடன், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிது தூவி, நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு இறாலில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, பின் மிதமான தீயில் 6-8 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் பிரட்டி, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

இறுதியில் உப்பு சுவை பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பிரட்டி இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

Related posts

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan

குல்பி

nathan

ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

ஃபிங்கர் சிக்கன் (finger chicken)

nathan

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan

சீரக மீன் குழம்பு

nathan

சுவையான சிக்கன் லெக் ஃப்ரை செய்ய தெரியுமா…!

nathan

அரைத்துவிட்ட மீன் குழம்பு|Arachu vacha meen kulambu

nathan