28.8 C
Chennai
Friday, May 23, 2025
haircare
கூந்தல் பராமரிப்பு

முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இந்த குறிப்புகள் நன்கு உதவுகின்றன!…

ஒரு காலத்துல எவ்ளோ முடி இருந்துச்சி தெரியுமா..?! இப்போ எல்லாமே கொட்டி போச்சி… என்று ஆணுகளும், என் முடி 60அடி கூந்தலாக இருந்துச்சி இப்போதான் இப்படி எல்லாமே கொட்டி போச்சி என்று பெண்களும் வேதனையுடன் கூறும் வார்த்தைகளை பல வீடுகளில் கேட்க முடியும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே 5 குறிப்புகள் உள்ளது.

குறிப்பாக முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இந்த குறிப்புகள் நன்கு உதவுகின்றன. இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இத்தனை நாள் நீங்கள் வேதனை பட்ட முடி சார்ந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க இங்கே எளிமையான வழிகள் உள்ளன. இந்த குறிப்புகளை பயன்படுத்தி வழுக்கைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்.

haircare

ஏன் வழுக்கை..?

முடி உதிர்வு அதிகரித்தால் இறுதியாக வழுக்கை தான் பரிசாக கிடைக்கும். முடியை உதிர வைக்க சில காரணிகள் உள்ளன. குறிப்பாக சீரற்ற வாழ்க்கை முறை, முடியை பராமரிக்காமல் இருத்தல், எண்ணெய்யை தவிர்த்தல், மரபணு ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை கூறலாம்.

குறிப்பு #1

வழுக்கை மண்டையில் முடியை வளர வைக்கும் எளிய முறை இதுவே. இதற்கு தேவையான பொருட்கள்..

முட்டை 1

கிரீன் டீ 4 ஸ்பூன்

செய்முறை

முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் கிரீன் டீ சேர்த்து தலைக்கு தடவி அரை மணி நேரம் சென்று தலையை அலசவும். இந்த குறிப்பு முடியை இறுக்கமாக மாற்றும். இதனால் முடி உதிர்வு இருக்காது.

குறிப்பு #2

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த குறிப்பு உதவும். அதற்கு தேவையானவை..

கற்றாழை ஜெல் 10 பீஸ்

கிரீன் டீ பேக் 4

தயாரிப்பு முறை

முதலில் வெந்நீரில் டீ பேக்கை ஊற வைத்து, அதன் எசென்ஸ் நீரில் இறங்கும் வரை காத்திருக்கவும். பிறகு கற்றாழையை அரிந்து இந்த நீரையும் இவற்றுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை தலைக்கு தடவி 20 நிமிட கழித்து தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.

குறிப்பு #3

முடியை கிடுகிடுவென வளர வைக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது.

தேவையான பொருட்கள் :-

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

கிரீன் டீ 3 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் கிரீன் டீ உடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் தரவும். 30 நிமிடத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.

குறிப்பு #4

இழந்த முடியை மீண்டும் பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை…

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

கிரீன் டீ 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் எலுமிச்சை சாறு மற்றும் கிரீன் டீயை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து தலைக்கு தடவ வேண்டும். 20 சென்று தலையை அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முடி மீண்டும் வளரும்.

Related posts

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

nathan

தலைமுடியை உலர வைக்க ஹேர் டிரையர் ( Hair Dryer) ஐ பயன்படுத்துகிறீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

தலைமுடி பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்

nathan

முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

nathan

ஹேர் டை உபயோகிப்பது ஆபத்தானதா?

nathan

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

nathan

பளபளப்பாக ஆரோக்கியமான அடர்த்தியான முடி இருக்க முயன்று பாருங்கள்!…

sangika

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும்.

nathan

முடி நன்றாக செழித்து வளர மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்!….

sangika