25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
leim1
அழகு குறிப்புகள்

பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள!…

எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும், அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இந்த பதிவில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.

 

எலுமிச்சை தோல்

எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சைத் தோலை கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 வழிகளின் மூலம் தீர்வு காணலாம்.

leim1

வழி 1

10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.

வழி 2

எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.எலுமிச்சையின் தோலை சீவி எடுத்த பின், எஞ்சிய எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து ஜூஸ் தயாரித்து குடித்தால் சில நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகளை கீழே காண்போம்.

எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

எலுமிச்சையில் வளமான அளவில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இதனால் அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்பட்டு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்

எலுமிச்சை ஜூஸின் முக்கிய நன்மை, அது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். அதோடு, இந்த ஜூஸ் கல்லீரலில் பித்த நீரின் உற்பத்தியை அதிகரித்து கொழுப்புக்களை எளிதில் கரைக்கச் செய்யும்.

எலுமிச்சை ஜூஸ் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக, இந்த ஜூஸைக் குடித்தும் பற்களைத் துலக்க வேண்டாம். இதனால் அதன் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். எனவே சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்க எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்கும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாத போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். எலுமிச்சையில் பொட்டாசியம் போதுமான அளவு இருப்பதால், இதன் ஜூஸை அடிக்கடி குடிக்க உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

Related posts

சிலி நாட்டில் பயங்கரம்., வெளிவந்த ஆதாரங்கள்

nathan

நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை…சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர், நடிகைகள்

nathan

அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

nathan

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!,tamil beautytips ,beauty tips tamil ,25 beauty tips tamil

nathan

சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகள்

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும்…..

sangika

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan

பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். இளமை தரும் பிஸ்தா!

nathan