29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
semparatham poo
கூந்தல் பராமரிப்பு

முடி நன்றாக செழித்து வளர மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்!….

சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

முடி நன்றாக செழித்து வளர :

கூந்தல் நீண்டு வளர சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.

பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.
தேங்காய்ப் பால்.
செய்முறை:
வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது. மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

அடர்த்தியாக வளர கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

மிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.

வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

வெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.

semparatham poo

செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

மரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.

வேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்

Related posts

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயம்……

sangika

கூந்தலுக்கு வளர்ச்சியை தூண்டும் பழங்கள்

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

முடி உதிர்தல் பிரச்சினை மட்டுமின்றி ஏனைய பல் வேறு பாதிப்புக்கள் ஏற்பட காரணம் தெரியுமா?…

sangika

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்!

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

sangika

எந்த ஷாம்பூ போட்டீங்க… கண்டிஷனரா? சில்க் டைப்பா? டிரையா..

nathan

கோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…

sangika

கூந்தல் வளர, நரை மறைய

nathan