அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கண்களுக்கு கீழே கருவளையமா?

cucumber-eyesஇன்றைய காலகட்டத்தில் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு விரைவில் கண்களுக்கு கீழே கருவளையம் வந்து விடுகிறது. இதனை போக்க வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்.

 

1. கண் கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

2. நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும்.

3. வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

4. பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.

5. வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும்.

6. கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.

7. திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.

8. உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.

9. தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும், இவ்வாறு 5-6 முறை செய்யவும்.

Related posts

63 வயதில் 6 வது முறையாக மனைவியை கர்ப்பமாக்கிய நடிகர்!

nathan

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

sangika

மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

சன் டேன் எனும் கருமையை நீக்க கற்றாழை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

nathan

கண்களை அழகாக காட்ட

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

வருண் அக்ஷராவுக்கு திடீர் திருமணம்?பரவும் புகைப்படம்!

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan