கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.
உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.
முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.
நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்.
பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும்.
பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.
விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும .
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
இடுப்பு வலி வராமல் தடுக்க சில வழிமுறைகள்:
உடல் எடையை பராமரித்தல், மிதமான உடற்பயிற்சி, அதிக எடை தூக்காதிருத்தல், முறையின்றி நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிக அளவில் டூ வீலர் பயணம் செய்யாமை, எண்ணெய் தேய்த்து குளித்தல் போன்ற உபாயங்களைக்கையாண்டால் IVDP ஏற்படாமல் தடுக்கலாம்.
உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
குப்புற படுக்கக் கூடாது.
நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
இதர வழிகள்:
நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.
உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.
படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.
கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்.
எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.