ring
அலங்காரம்ஃபேஷன்அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

பொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள்.அது ஜாலியான விஷயமெல்லாம் இல்லை. அது சாதாரண விஷயமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி அதில் அவ்வளவு சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதோ பார்க்கலாம் வாங்க.

மோதிரங்கள் அணியுமிடம் சில சமயங்களில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற சில உலோகங்களால் ஆன அணிகலன்களை அணிகின்ற பொழுது, அதிலுள்ள ஆக்சிடைஸ் நம்முடைய சருமத்தில் கறைகளையும் தீம்புகளையும் ஏற்படுத்தி விடும். அப்படி தழும்புகள் உண்டாகாமல் இருப்பதற்கும் பச்சை நிற கறைகள் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி சரிசெய்யலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ring

கிளியர் நெயில் பாலிஷ் மோதிரங்களில் உள்ள உலோகத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிடைஸ் தான் இந்த பச்சைநிற மாற்றத்துக்குக் காரணம். அதனால் கண்ணாடி போன்ற கிளயர் நெயில் பாலிஷை மோதிரத்தின் உட்பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விட்டு, பின் கைகளில அணிந்து கொள்ளுங்கள். இது பச்சை நிற கறை விரல்களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதேசமயம் மோதிரம் சற்று கூடுதல் பளபளப்புடன் இருக்கும்.

ஸ்கின் கார்டு கடைகளில் சருமங்களில் தழும்புகள் விழாமல் பாதுகாக்க ஸ்கின் கார்டு என்றே விற்கப்படுகிறது. அதை வாங்கி மோதிரங்கள் மற்றும் கொழுசு, அரைஞாண் கயிறு அணியும் இடங்களில் தடவிக் கொண்டு, அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். இதில் உங்களுககு ஒரு கேள்வி வரலாம். இந்த ஸ்கின் கார்டு தினமும் அப்ளை செய்ய வேண்டுமா என்று நீங்கள் கேட்டலாம். அதற்கு அவசியம் இல்லை. ஒருமறை அப்ளை செய்தால், அது நம்முடைய சருமத்தை இரண்டு மாதங்கள் வரை சருமத்தில் பச்சை நிறம் தோன்றாமல் இருக்கும்.

கைகழுவும் முன் கை கழுவுவதற்கு முன்பு, கையில் காப்பு அல்லது மோதிரத்தை கழற்றி விட வேண்டும். ஈரமான பின் கழற்றக் கூடாது. நீச்சல் அடிக்கின்ற பொழுது, கைகளைக் கழுவும்போது மோதிரங்களைக் கழற்றிவிடுவது நல்லது. ஏனெனில் தண்ணீரின் மூலம் சருமத்தில் ஏற்படுகின்ற ஆக்சிடேசனால் மோதிரங்கள் அணிந்திருக்கும் இடத்தில் பச்சை நிறத்தில் மாறிவிடுகிறது.

சோப்புகள் கைகளில் லோஷன்கள் அப்ளை செய்யும் போது, சோப் மற்றும் பர்ஃபியூம்களைக் கையாளும் போது மோதிரங்களை அணிந்திருக்கக் கூடாது. அதை கழற்றி வைத்துவிடுவது நல்லது.

Related posts

இத செய்யுங்கள் போதும்..!!தொடை மற்றும் அக்குளில் அசிங்கமாக கறுப்பு அடையாளம் இருக்கா ?

nathan

குழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்!…

sangika

அழகா… ஆரோக்கியமா

nathan

முகத்திற்கான க்ளென்ஸிங் – அழகு குறிப்புகள்

nathan

அழகு சாதனப் பொருள் வாங்கும் போது கவனமா இருங்க!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

மலர்ந்த பூக்களாக பெண்களின் மனதை கவரும் நகைகள்

nathan

சிறு முயற்சி.,கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! பெரிய ஆரோக்கியம்..!!

nathan

தெரிஞ்சிக்கங்க… இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா? இதோ சில ஆயுர்வேத வழிகள்!

nathan