kuth
கால்கள் பராமரிப்புஅழகு குறிப்புகள்

ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?….

நாம் விரும்பும் இடத்திற்கெல்லாம் எந்த நேரமாக இருந்தாலும் நம்மை அழைத்து செல்லும் ஒரு அருமையான நண்பன் நமது கால்கள் தான். இவ்வளவு உதவி செய்யும் இந்த நண்பனை நாம் கொஞ்சம் கூட பார்த்து கொள்ளவில்லையென்றால் மிகவும் அபத்தமான விஷயமாகும்.
பாதங்களில் ஏராளமான பிரச்சினைகள் வர கூடும். அவற்றையெல்லாம் நாம் கண்டு கொள்ளாமலே இருந்தால் பிரச்சினை நமக்கு தான். குறிப்பாக பாதத்தில் வெடிப்புகள் அதிகம் ஏற்பட கூடும். இந்த வெடிப்புகளே பாதத்திற்கான எதிரி. எப்படி ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது என்பதை இனி அறிவோம்.

அதிக உழைப்பா..? ஆண்கள் அதிக நேரம் தங்களது பாதங்களை பயன்படுத்துகின்றனர். அதே சமயத்தில் பாதங்களை பற்றி கொஞ்சமும் கண்டு கொள்வதும் இல்லை. இந்த நிலை பல நாட்களாக இருந்தால் பாத வெடிப்பு, காயங்கள், அரிப்புகள் என பல தொற்றுகள் வர தொடங்கும். பிறகு வீக்கம் ஏற்பட்டு உங்களால் நடக்க கூட முடியாத நிலை ஏற்படலாம்.
kuth
மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளை காட்டிலும் ஆயுர்வேத முறை சற்றே முதன்மையானதாக கருதப்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படுகின்ற பாத வெடிப்பை சரி செய்ய ஒரு அருமையான ஆயுர்வேத முறை உள்ளது. அதற்கு தேவையானவை… நெய் 5 ஸ்பூன் மஞ்சள் 1 ஸ்பூன் வேப்பிலை பொடி 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி கொள்ள வேண்டும். அடுத்து மஞ்சள் மற்றும் வேப்பிலை பொடியை நெய்யுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தடவி மசாஜ் கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து மீண்டும் வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து போகும்.

பால் வைத்தியம் மிக எளிமையாக பாதத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். தேவையானவை :- பால் 1 கப் தேன் 2 ஸ்பூன் ஆரஞ்சு சாறு 1/2 கப்

செய்முறை :- பாதத்தை வெது வெதுப்பான நீரில் முதலில் கழுவி கொள்ளவும். அடுத்து, ஆரஞ்சு சாறு மற்றும் தேனை பாலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 40 நிமிடம் கழித்து பாதத்தை கழுவி விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பாதங்களை வெடிப்புகள் இன்றி அழகாக வைத்து கொள்ளலாம்.

கற்றாழை வைத்தியம் வெடிப்புகளை மறைய வைக்க கூடிய ஆற்றல் இந்த வைத்தியத்திற்கு உள்ளது. இதற்கு தேவையானவை… கற்றாழை ஜெல் 3-4 பீஸ் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் சந்தனம் 1 ஸ்பூன் வேப்பிலை பொடி 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் கற்றாழையை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள், சந்தனம், வேப்பிலை பொடி ஆகியவற்றை கலந்து பாதத்தில் தடவவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் பாதத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புகள் காணாமல் போய் விடும்.

எலுமிச்சை பாதங்களை வெடிப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ள நம்ம வீட்டில் இருக்க கூடிய இந்த அற்புதமான எலுமிச்சை உதவும். எலுமிச்சையை பாதியாக வெட்டி கொண்டு, ஒரு பாதியை வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்க்கவும். இவ்வாறு செய்து வந்தால் வெடிப்புகள் மறைந்து போகும். இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

Related posts

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!,tamil beautytips ,beauty tips tamil ,25 beauty tips tamil

nathan

முகப்பருக்களை விரட்ட…!! வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….

sangika

உங்களுக்கு சேலை கட்டத் தெரியாத?அப்ப இந்த வீடியோவைப் பாருங்கள்!

nathan

என்ன ​கொடுமை இது? தலைகீழாக நின்னு போட்டோ சூட் நடத்திய இனியா

nathan

பச்சை வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika