25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
apais
அலங்காரம்ஃபேஷன்

இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெஷன்…..

தீபாவளி என்றாலே பெண்களுக்கு என பிரத்யேக ஆடைகள் வெவ்வேறு வேலைப்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெண்களின் ஆர்வத்தை தூண்டும் என ஆடைகளை உருவாக்கவே தனிப்பட்ட வடிவமைப்பாளர்கள் கூடுதல் மெனக்கெட்டு வடிவமைக்கின்றனர். அதன் காரணமாக புதிய ஆடைகள் வெளிவரும்போதே அதற்குரிய சிறப்பிடத்தை பிடித்து விடுகின்றன. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.
அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது முழு நீள உடையாகும். இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற அபையா என்ற ஆடையை அடிப்படையாக கொண்டு அழகிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்த சல்வார் காமீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அபையா ஆடை என்பது அணிபவரின் முழு உடல் பகுதியை மூடும் அமைப்பில் கை மற்றும் கால்பகுதி மட்டும் தெரியும் வகையில் உள்ள ஆடை. அதிக வெட்டுதல்கள் இன்றி முழு துணி அமைப்பை தான் மாறுபட்ட வகையில் அதிக வேலைப்பாட்டுடன் கூடிய நவநாகரீக ஆடையாக மாற்றியுள்ளனர்.
apais
தரையில் புரளும் ஆடையின் அமைப்பு இந்திய பெண்கள் அணியும் வகையிலான வடிவில் அதிக வேலைப்பாடு மற்றும் திறன்மிகு கலையம்ச மேம்பாட்டுடன் உருவாகி உள்ளது. பார்த்தவுடன் விரும்பும் வகையில் அபையா ஆடைகள் வண்ண பொலிவும், துணிகளின் நேர்த்தியும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

அபையா ஸ்டைல் சுடிதாரின் சிறப்புகள்:

அபையா ஸ்டைல் சுடிதார் என்பது பல்வேறு விதமான துணிரகங்களில் உருவாக்கப்படுகிறது. இதற்கென பாக்ஸ் ஜாக்கெட் மற்றும் நெட் துணிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆடைகள் அனைத்தும் பல பிரிவுகள் உள்ளவாறு அதாவது திருமணம், பார்ட்டி, விழா, பண்டிகை என்பதுடன் முக்கியமான மீட்டிங் போன்றவைகளுக்கு அணிய ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் உருவாக்கப்படுகிறது.

சாதாரணமாகவே அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது அதிகபட்ச வேலைப்பாட்டுடன்தான் உருவாக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட ஓவிய வேலைப்பாடு என்பது பார்டர், ஸ்லீவ் மற்றும் கழுத்து பகுதிகள் அனைத்திலும் அதிக சிறப்பு தன்மையுடன் நெய்யப்பட்டுள்ளது. அதாவது பாரம்பரிய எம்ப்ராய்டரி கைவினைகளைஞர்கள் கொண்டு பூ வேலைப்பாடு, கட்தானா பணி, ஜரிகை வேலைப்பாடு, கோட்டாபட்டி, தோனி எம்ப்ராய்டரி, காஷிபா, ரேஷம் எம்ப்ராய்டரி மற்றும் கல் பதியப்பட்டது என அதி உண்மையான கலையம்ச பணிகள் தனிநேர்த்தியுடன் செய்யப்படுகின்றது.

ஆச்சர்யமூட்டும் சில வடிவமைப்புகள்

அனார்கலியோடு ஒப்பிட்டு குழம்ப கூடாது என்பதற்கு இதில் மாறுபட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் முழு கை அமைப்பு என்பது ஒரு சில மாடல்களில் மட்டுமே இருக்கும். மற்றதில் பிற வகை கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் கழுத்து பகுதி பல வித மாடல்களில் திறம்பட வளைவுகளுடன் தைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்த வகையில் உள்பகுதி லேயர்கள் மெல்லிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எம்ப்ராய்டரி ஜாக்கெட் அபையா சூட்ஸ்

ஒற்றை வண்ண பின்னணியில் தங்க நிற கம்பிகள் பின்னப்பட்ட எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் ஜாக்கெட் அபையா ஸ்டைல் சூட்ஸ் வருகின்றன. முழு உடையில் மார்பு பகுதி, கைப்பகுதி மற்றும் ஆடையின் கீழ்பகுதியில் அடுத்தடுத்தான எம்ப்ராய்டரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேவி ப்ளு, மெரூன், பிங்க், சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களில் இந்த எம்ப்ராய்டரி ஜொலிக்கின்றது. ஆடையின் மார்பு பகுதி ஜொலிக்கும் கவசம் போன்ற அமைப்புடன் பின்னல் செய்யப்பட்டும் அதன் கீழ் பகுதி மலர்கள் உள்ளவாறும் நெய்யப்படுகிறது. கொடிகள், இலைகள் உள்ளவாறும், ஆடையின் கீழ்பகுதி டிரில் அமைப்பில் அடுத்தடுத்தான தோரண அமைப்பு உள்ளவாறு கூடுதல் தரத்துடன் எம்ப்ராய்டரி அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நெட் துணியில் அபையா சூட்ஸ்

பாலி ஷன்டூன் லைனிங் அமைப்பு என்பது நூல் மற்றும் ஜரிகையில் நெய்யப்பட்டவாறு மேல் கோட் அமைப்புடன் உள்ளது. இதில் மேற்படி அழகை கூடுதல் மேம்படுத்தும் வகையில் நெட் துணியில் துப்பட்டா மற்றும் மேல்சட்டை அமைப்பு கொண்டவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சைனீஸ் காலர் அமைப்புடன் மெல்லிய துணியின் மேற்பகுதி, உட்புறபகுதி பாலி ஷன்டூன் துணி அமைப்பு மெல்லிய எடை குறைந்த ஆடைக்கு உத்தரவாதம் தருகிறது. ராயல் கவுன் அமைப்பில் கம்பீர நடையுடன் பவனி வரச்செய்யும் இந்த அபையா ஸ்டைல் ஆடைகள் புதிய திரைப்படங்களில் கதாநாயகிகளின் முக்கிய ஆடையாக உலா வருகிறது. கூடிய விரைவில் அழகிய பெண்களின் அட்டகாசமான ஆடையாக வீதிகளில் அணிந்து செல்லும்போது கண்டு வியந்திடவே செய்வர்.

Related posts

மிதமான வெளிச்சம்… கண்ணுக்கு குளிர்ச்சி… வீட்டுக்கு அழகு திரை சீலைகள்

nathan

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

nathan

இவ்வாறான ஆண்மகனை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையாக!…

sangika

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தீபாவளி பண்டிகை ஷாப்பிங்…

sangika

நவீனத்திற்கு ஏற்ப மாறிவிடும் புத்தம் புதிய சேலைகள்

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

பெண்களுக்கு அழகு தரும் ஆடைகள்

nathan

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

nathan