தேன் நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. நம் கிச்சனில் காணப்படும் முக்கிய பொருட்களில் தேனும் ஒன்று என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் அழகு பராமரிப்பிலும் இதன் நன்மை ஏராளம். பேஸ் பேக்குகளிலிருந்து, முகத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வரை இதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கிறது. இதோடு இதன் பயன் நிற்பதில்லை.
நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது. தேனை தலையில் தேய்த்தால் முடி நரைத்துவிடும் என்று சின்ன வயதிலிருந்தே சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று.
தேன் ஒரு இயற்கையான கண்டிஷனர் மாதிரி செயல்பட்டு கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் பிரச்சினைகளை களைகிறது.சரி வாங்க அதனுடைய நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
பயன்கள் இயற்கை வரப்பிரசாதம் தேன் ஒரு இயற்கை வரப் பிரசாதம் என்றே கூறலாம். காரணம் இது நமது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. தலையில் உள்ள ஈரப்பதத்தை காத்து வறண்ட போகாமல் காக்கிறது. கூந்தல் உடைந்து போதல், பிளவுபட்ட முடிகள் மற்றும் கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மை கூந்தலில் ஏற்படும் அழற்சி, தொற்றுகளை போக்குகிறது. சொரியாஸிஸ் போன்ற நோய்களை எதிர்த்து போரிடுகிறது. மேலும் தொற்று களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து முடியை வலுவாக்கி கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
கூந்தலுக்கு நிறமூட்டுதல் தேன் ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆகும். எனவே இதை கூந்தலில் அப்ளே செய்யும் போது ஒரு இயற்கையான நிறத்தை கொடுத்து கூந்தலை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்கிறது. நீங்கள் தினமும் சாம்பு போட்டு குளித்த பிறகு 1 டீ ஸ்பூன் தேனை எடுத்து கூந்தலில் அப்ளே செய்து சில நிமிடங்கள் கழித்து அலசி வாருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கூந்தல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.
ஈரப்பதத்தை தருதல் நாம் தினந்தோறும் வெளியே செல்லும் போது நமது கூந்தல் மாசுக்கள், சூரிய ஒளி, தூசிகள் இவற்றால் வறண்டு பொலிவிழந்து போய் விடுகிறது. எனவே உங்கள் கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்க்கும் போது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சியை நீக்கி பொலிவாக்குகிறது.
வேர்க்கால்களுக்கு வலிமை தேன் ஒரு இயற்கையான மருந்து. இது நமது கூந்தலை வலிமையாக்குகிறது. இது வேர்க்கால்களுக்கு ள் சென்று அதை வலிமையாக்கி கூந்தல் உதிராமல் தடுக்கிறது. சரி வாங்க இப்பொழுது தேனைக் கொண்டு எப்படி வீட்டிலேயே கண்டிஷனர் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம் .
ஹனி ஹேர் கண்டிஷனர் தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் 2 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழம் 1 டீ ஸ்பூன் யோகார்ட் பயன்படுத்தும் முறை ஒரு பெளலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும் 1/2 மசித்த வாழைப்பழம், தேன் கலந்து அதனுடன் சேர்த்து கலக்கவும். நல்ல க்ரீம் மாதிரி வரும் வரை கலக்கவும். பிறகு அதனுடன் கொஞ்சம் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலை மற்றும் கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். 20-25 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி நன்றாக உலர்த்துங்கள். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எனவே உங்கள் கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்த்து கொண்டு ஏராளமான நன்மைகளை பெறுங்கள்.