30.1 C
Chennai
Sunday, Jul 12, 2026
சரும பராமரிப்பு

அவசியம் படிக்க.. கழுத்தில் இருக்கும் கருமை நீங்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

ஒருசிலரை பார்க்க அழகாக தெரிவார்கள். ஆனால் அவர்களுக்கு கழுத்து ஒரு நிறத்திலும் முகம் வேறு நிறத்திலும் காணப்படும்.

கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தினால் அவர்களின் முழுமையான அழகு பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சூரியனின் கடுமையான புறஊதாக் கதிர்களின் தாக்கமாகும்.

எனவே நாம் எப்போதும் முகத்திற்கு அழகு சேர்க்கும் போது, கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தையும் கவனிக்க வேண்டும்.

எலுமிச்சை
3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.

இதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

தேன்
1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும்.

ஆரஞ்சு தோல்
சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை உடனடியாக போகும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

தக்காளி
தக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. எனவே இந்த தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பின் இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.

பப்பாளி
பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சமஅளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

சந்தனப் பொடி
இரவில் படுக்கும் முன், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

Related posts

இயற்கை தரும் இதமான அழகு

nathan

சூப்பர் டிப்ஸ் கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!

nathan

ஒரு வாசலின் டப்பா உங்க எல்லா சரும பிரச்சனைகளை போக்கிவிடும் தெரியுமா?

nathan

சீக்கிரம் வெள்ளையாக – இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடியுங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறண்டு இருக்கும் சருமத்தை சரிசெய்வதற்கான சில வழிகள்!

nathan

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?

nathan

கருவளையும், கழுத்தும் கருமையும் இருந்த இடம் காணாமல் போக

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika

மழை நீரால் உங்கள் சருமத்தை எப்படி சுருக்கமின்றி பொலிவாக்கலாம் என தெரியுமா?

nathan