உருளைக்கிழங்கில் அதிகளவான அண்டிஒக்ஸிடன் மற்றும் உடலிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் காணப்படுவதனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அதன் அழகினைப் பேணி இளமையை தக்க வைத்திருக்க உதவுகிறது.
சரும நிறத்திட்டுக்கள், உலர்ந்த சருமம் போன்ற பல பிரச்சினைகளிற்கு ஒரே தீர்வாக உங்கள் சமையலறையில் உள்ள உருளைகிழங்கைப் பயன்படுத்தலாம்.
உருளைகிழங்கை சரும அழகிற்கு பயன்படுத்துவது எப்படி?
1. பளபளப்பான சருமத்திற்கு.
உருளைக்கிழங்கில் விட்டமின் சி மற்றும் அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கி அதில் தேனைக் கலந்து முகத்திற்கு தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். பளபளப்பான சருமத்திற்கு வாரத்திற்கு இரு தடவைகள் இதனைச் செய்வது சிறந்தது.
2. உலர்ந்த சருமத்திற்கு
உலர்ந்த சருமத்தை சரி செய்வதற்கும் சருமம் வயதடையாமல் பாதுகாப்பதற்கும் உருளைக்கிழங்கு பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்.
• 3 மேசைக்கரண்டி உருளைகிழங்கு சாறு.
• 1 மேசைக்கரண்டி சோர் கிறீம்.
•
பயன்படுத்தும் முறை:
மேற்குறிப்பிட்டவற்றைச் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனால் சருமம் ஈரப்பதம் அடைகிறது.
3. சருமத்தின் எண்ணெய்த் தன்மைக்கு.
எண்ணெய்த் தன்மை அதிகரித்தால் பருக்கள் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது. ஆனால் உருளைக்கிழங்கு சருமத்தை மிருதுவாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
• 3 மேசைக்கரண்டின் உருளைக்கிழங்கு சாறு.
• 1 மேசைக்கரண்டி மோர்.
• 2 மேசைக்கரண்டி கடலை மாவு.
• 1 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு.
பயன்படுத்தும் முறை:
மேற்குறிப்பிட்டவற்றை ஒன்றாகச் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளிற்கு பூசி 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனால் தேவையற்ற எண்ணெய்த் தன்மை நீங்கி இளமையாக சருமம் காட்சியளிக்கும்.
1. சரும நிறத்திட்டுக்களை நீக்குவதற்கு.
சருமத்தில் உள்ள நிறத்திட்டுக்களிற்கு காரணம் இறந்த கலங்கள் படிவடைவதே. இதனை உருளைக்கிழங்கு பயன்படுத்தி இலகுவாக நீக்க முடியும்.
தேவையான பொருட்கள்.
• 1 மேசைக்கரண்டி உருளைக்கிழங்கு சாறு.
• 1 மேசைக்கரண்டி முட்டை வெள்ளைக்கரு.
• 1 மேசைக்கரண்டி தயிர்.
•
பயன்படுத்தும் முறை.
எல்லா சேர்மானங்களையும் ஒன்றாகச் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துப் பகுதிகளிற்கு தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறப்பானது.
2. சருமக் கறைகளிற்கு.
உருளைக்கிழங்கை தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் சருமக் கறைகள் நீங்கும்.
தேவையானவை:
• 1 மேசைக்கரண்டி உருளைக்கிழங்குச் சாறு.
• 1 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு.
• 2 மேசைக்கரண்டி தேன்
• 1 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய்.
•
பயன்படுத்தும் முறை:
மேற்குறிப்பிட்ட சேர்மானங்களைச் சேர்த்து அடர்த்தியான பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துப் பகுதிகளிற்கு தடவி 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். உங்களது எண்ணெய் சருமமாக இருந்தால் ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.