28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
download 1
முகப் பராமரிப்பு

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேவிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க, நவீன மருத்துவச் சிகிச்சையையும் செய்து வருகின்றார்கள்.

download 1ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

முகத்தில் உள்ள முடியை இயற்கையில் நீக்குவது எப்படி?
  • தினமும் குளிக்கும் போது மஞ்சள், வசம்பு அரைத்து, பாலில் குழைத்து, அதை முகத்தில் தடவி, காயவைத்து குளிக்க வேண்டும்.
  • 1/2 கப் பாசிப் பயிற்றில், 1/2 கப் பால் சேர்த்து அரைத்து, ஒரு டீஸ்பூன் மஞ்சள் துாள், தேங்காய் எண்ணெய், எலுமிச்சைச்சாறு ஆகிய அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி, 25 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை 45 நாட்கள் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து சுடுதண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் வைத்து, அது கிரீம் பதத்தில் வந்ததும் அதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, கழுவ வேண்டும்.
  • குப்பைமேனி இலைப் பொடியுடன், 1/4 டீஸ்பூன் மஞ்சள் துாள், 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றைக் கலந்து, தேவையற்ற முடிகளின் மீது தினமும் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கறுப்பு உளுந்து, மஞ்சள் துாள் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீர் விட்டு கலந்து முடி உள்ள இடத்தில், வாரம் இரண்டு முறைகள் தடவி தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • 1/2 டீஸ்பூன் பப்பாளிக்காய் பேஸ்ட், 1/4 டீஸ்பூன் மஞ்சள் துாள் ஆகிய இரண்டையும் சேர்த்து, முடி உள்ள இடத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

Related posts

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

nathan

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

nathan

அடர்த்தியான புருவம் கிடைக்க இந்த வழிகளை உபயோகிச்சு பாருங்க!!

nathan

கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கான காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்…!

nathan

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தர இதை செய்து வாருங்கள்……

sangika

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள்!

nathan

சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்கும் பேக்கிங் சோடா

nathan

இதோ சில டிப்ஸ்… ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க வேண்டுமா?

nathan