27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
pimple2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், துளைகள் , மருக்களை இப்படியும் இல்லாதொழிக்கலாம்!

முக அழகென்பது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலாருக்கும் முக்கியமானதொன்றாகும். முகத்தில் உள்ள பருக்கள், துளைகள், கரும்புள்ளிகள் மற்றும் மருக்கள் என்பன முக அழகை சில சமயங்களில் பாதித்து விடும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்மவர்கள் அதிக பணம் செலவழித்து பல்வேறு முறைகள் மூலம் முகத்தை அழகுபடுத்த முயற்சிப்பர். ஆனால் அது தேவையே இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தை அழகாக்கலாம்.

இது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

01. முகத்தில் உள்ள துளைகள்
– ஷ_கர்ஸ்கிரப்ட்ரீட்மன்ட்
எலுமிச்சை மற்றும் சீனியைக் கலந்து அதனை ஒரு கலவை போல் ஆக்கி பஞ்சு ஒன்றின் உதவியுடன் முகத்தில் வைத்து வட்ட வடிவில் பூசுவதன் மூலம் துளைகளை மூடலாம்.

– ஸ்டீமிங்ட்ரீட்மன்ட்
முதலில் முகத்தைக் கழுவி பின்னர் ஆவி பிடித்தல் வேண்டும். இவ்வாறுb செய்யும் போது தலைமுடியை துவாயொன்றின் மூலம் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 10 – 15 நிமிடங்கள் வைத்திருத்தல் வேண்டும். பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் சில தடவைகள் கழுவ வேண்டும். இறுதியாக முகத்தில் மீதமுள்ள கழிவுகளை அகற்ற சிறிதளவு வினாகிரியை பூச வேண்டும்.

02. கரும்புள்ளிகளை அகற்ற
– விட்டமின்-சி சீரம் ட்ரீட்மன்ட்
விட்டமின்-சி சீரம் என்பது சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இதனை சருமத்தில் பூசுவதன் மூலம், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகற்றப்படுவதோடு பாதிக்கப்பட்ட சருமம் புத்துணர்ச்சி பெறும்.

– ஹோர்ஸ்ரட்டிஷ; ட்ரீட்மன்ட்
ஹோர்ஸ்ரட்டிஷ; என அழைக்கப்படும் ஒருவித முள்ளங்கியை வினாகிரியுடன் கலந்து ஒவ்வொரு நாளும் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கரும்புள்ளிகள் மறையும்.

– எலுமிச்சம் ட்ரீட்மன்ட்
எலுமிச்சம் சாற்றை எடுத்து அதை பஞ்சொன்றில் தொட்டு நாளொன்றுக்கு இரண்டு முறை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்தால் கரும்புள்ளிகள் மறையும்.

– கற்றாளை ட்ரீட்மன்ட்
கற்றாளை சாற்றை எடுத்து அதனை கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் பூசி 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் கரும்புள்ளிகள் அகற்றப்படும்.

– வெங்காய ட்ரீட்மன்ட்
வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி அதில் உள்ள சாற்றை எடுத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் பூச வேண்டும். பின்னர் 10 – 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

03. மருக்கள்
– தேன் ட்ரீட்மன்ட்
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் உள்ள மருக்கள் மீது தேன் பூசி பான்டேஜ் சுற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் மறையும்.

– வாழைப்பழ ட்ரீட்மன்ட்
ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் வாழைப்பழத் தோலின் உட்பகுதியை மருக்கள் மீது பூச வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் மருக்கள் நாளடைவில் மறையும்.

– ஆப்பிள் சைடர் வினிகர் ட்ரீட்மன்ட்
ஆப்பிள் சைடர் வினிகர் சிறிதளவை எடுத்து பஞ்சொன்றின் உதவியுடன் மருக்கள் உள்ள பகுதியில் பூச வேண்டும். பின்னர் அதனை பான்டேஜ் ஒன்றினால் சுற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வர நாளடைவில் மருக்கள் மறையும்pimple2

Related posts

சிவப்பழகு பெற வீட்டில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

nathan

பனிக்கால சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு சம்பந்பட்ட முக்கிய குறிப்புகள்!இதை படிங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி முகம் கழுவினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

அம்மைத் தழும்புகளை செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும்.

nathan

முகப்பொழிவு தரும் துவரம்பருப்பு

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

தெரிஞ்சிக்கங்க…பளபளப்பான சருமத்திற்கு மயோனைஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

nathan

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

nathan

கன்னம் அழகாக சில குறிப்புகள்

nathan