தயிர் மற்றும் ஆப்ரிகாட் ஆப்ரிகாட் பழம் மற்றும் தயிரை ஒன்றாக நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், இத்துடன் சிறிது தேனை சேர்த்துக் கொள்ளலாம். கற்றாழை ஜூஸ் கற்றாழை ஜூஸ் சருமத்தில் ஆங்காங்கு கருமையான புள்ளிகள் காணப்பட்டால், அப்பகுதியில் கற்றாழை ஜெல்லை தினமும் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சியின்றி ஈரப்பசையுடன் காணப்படும்.
ஆபிஸ் போகும் முன் இதால முகத்தை துடைச்சா, பளிச்சுன்னு வெள்ளையா தெரிவீங்க தெரியுமா? முட்டைக்கோஸ் ஜூஸ் மற்றும் தேன் முட்டைக்கோஸ் ஜூஸ் மற்றும் தேன் முட்டைக்கோஸ் ஜூஸ் உடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த கலவையை தினமும் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.