தலைமுடி உதிர்வால் இன்று ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவரது தலைமுடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிலருக்கு இந்த தலைமுடி உதிரும் பிரச்சனை நிற்கவே நிற்காது மற்றும் தினந்தோறும் ஒவ்வொரு முறை தலையைத் தொடும் போதும் ஏராளமான அளவில் முடியை கையில் கொத்தாக பெறுவார்கள். இப்படி ஒருவருக்கு தலைமுடி கொத்தாக வந்தால், உடனே தலைமுடிக்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஒருவரது தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால், அது வழுக்கை ஆவதற்கான முதல் அறிகுறியாகும்.
எனவே இதைத் தவிர்க்க வேண்டுமானால், இதுவரை நீங்கள் உங்கள் தலைமுடிக்கு கொடுத்து வந்த பராமரிப்பை விட அதிக அளவில் பராமரிப்பு கொடுத்து, தலைமுடி உதிர்வதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 50-100 தலைமுடி உதிர்வது சாதாரணம் தான். இதற்கு அதிகமாக தலைமுடி உதிர்ந்தால் தான் பிரச்சனையே. ஆரம்பத்திலேயே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி அதிகம் உதிர்வதைத் தடுத்து, உதிர்ந்த இடத்தில் மீண்டும் தலைமுடி வளர உதவியாக இருக்கும். கருஞ்சீரக எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் நல்லது மற்றும் இது தலைமுடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும். இந்த கட்டுரையில் தலைமுடி உதிர்வதைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
கருஞ்சீரக எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்! * ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும் * தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும் * முடி உதிர்வது நிற்கும் * நரைமுடி வராமல் இருக்கும் * முடி வறட்சி அடையாமல் இருக்கும் * முடி பாதிப்படையாமல் இருக்கும் இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் தேவையான பொருட்கள்: * தேங்காய் எண்ணெய் – 1 கப் * தேன் – 1 டேபிள் ஸ்பூன் * கருஞ்சீரக எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டு
பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துண்டை தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இந்த ஹேர் மாஸ்க்கின் முழு நன்மையையும் பெறலாம். * 20 நிமிடம் – 1 மணிநேரம் நன்கு ஊற வைத்த பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். * இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.
கருஞ்சீரக எண்ணெய் சிகிச்சை தேவையான பொருட்கள்: * கருஞ்சீரக எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: * கருஞ்சீரக எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரு கைகளையும் நன்கு தடவ வேண்டும். * பின் கையில் உள்ள அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * ஸ்கால்ப் முழுவதும் எண்ணெயை தடவியப் பின், முடியின் நுனி வரை தடவ வேண்டும். * பின்பு 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் கழித்து, தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும். * இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது விரைவில் நின்றுவிடும்.
கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் தேவையான பொருட்கள்: * கருஞ்சீரக எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த எண்ணெய் கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். * 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை நன்கு ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். * இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தேவையான பொருட்கள்: * கருஞ்சீரக எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: * ஒரு சிறு பாத்திரத்தில் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக ஊற்றி, அடுப்பில் வைத்து 2 நொடிகள் சூடேற்ற வேண்டும். * பின் அந்த எண்ணெயை வெதுவெதுப்பான நிலையில் ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு முடியின் நுனி வரை எஞ்சிய எண்ணெயை தடவ வேண்டும். * ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்த பின், 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * இறுதியில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். * இந்த முறையை வாரத்திற்கு 2 முறை மேற்கொண்டால், தலைமுடி உதிர்வது விரைவில் நின்றுவிடும்.
எலுமிச்சை மற்றும் கருஞ்சீரக எண்ணெய் தேவையான பொருட்கள்: * எலுமிச்சை – 1 * கருஞ்சீரக எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் எலுமிச்சை சாற்றினை ஸ்கால்ப்பில் நேரடியாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். * 15 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். * அதன் பின் முடியை நன்கு உலர்த்த வேண்டும். பின்பு கருஞ்சீரக எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். * இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வருவது தலைமுடிக்கு நல்லது.