வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் கால்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. நடையின் அசைவு மூலம் மனிதனில் மனநிலையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. சந்தோசம், பதற்றம், அவசரம், பயம் என ஒவ்வொரு உணர்வுகளையும் கால்களின் நடையின் மூலம் கணித்து விடலாம். அந்த கால்களின் பாதங்களை நாம் சரியாக பராமரிக்கிறோமா என்பது கேள்விக்குறியே. சிறிது நேரம் ஒதுக்கி நமக்காக ஓடும் கால்களின் பாதங்களை சுத்தம் செய்து பராமரிப்பதற்கான டிப்ஸ் இங்கே.
1. பாதங்களை சரியாக கழுவுங்கள்: தினமும் வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும் போது தரமான கிருமிநாசினி சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
2. ஒரு பங்கு வினிகருடன் இரண்டு பங்கு நீரைச் சேர்த்து நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் பாதங்களில் ஏற்படும் பாக்டீரியா பாதிப்புகளை பெருமளவில் குறைக்கலாம்.
3. எப்பொழுதும் அசுத்தமான,வியர்வை மிகுந்த காலுறைகளைத் தவிர்த்து விடுங்கள்.
4. பாதங்களை பராமரிப்பதற்காக சரியான சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உங்கள் டயட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் போன்றவற்றை குறைப்பதன் மூலம் உங்கள் பாதங்கள் எளிதில் சோர்வடையாமல் தவிர்க்கலாம்.
6. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பவுடர்கள்,ஸ்பேரேக்கள் போன்றவற்றை சரியாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.
7. பாதங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை போக்குவதற்கென்றே உள்ள மூலிகைகளைப் பயன்படுத்துங்கள்.