29.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
2 1535450794
முகப் பராமரிப்பு

ஆண்கள் இதையெல்லாம் செய்தால் முகம் முதல் நுனி பாதம் வரை அழகு கூடுமாம்..! இதை முயன்று பாருங்கள்..

இன்றைய வேகமான உலகில் நம்மை நாமே மறந்து ஓடி கொண்டிருக்கின்றோம். அவ்வப்போது நம்மை கவனித்து கொண்டால் மட்டுமே உடல் அளவிலும் உளவியல் ரீதியாகவும் நாம் மேம்படுவோம். வேலை பளு எப்போதுமே நமக்கு இருக்கத்தான் செய்யும். அதற்காக எல்லா வகையிலும் நம்மை நாம் பார்த்து கொள்ளவில்லையென்றால் அவ்வளவுதான். காலத்தோடு காலமாக நாம் மறைந்து போய்விடுவோம். இதனை தடுக்க உங்களுக்காக நீங்கள் முதலில் நேரத்தை ஒதுக்குங்கள்.

உங்களை ஆரோக்கியமாக உங்களை தவிர வேறு யாராலும் பார்த்து கொள்ள முடியாது. குறிப்பாக உங்கள் உடல் அழகையும் சேர்த்தே கவனிப்பது மிக இன்றியமையாததாகும். ஒருவரின் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே போன்றுதான் உடல் அழகும். இந்த பதிவில் ஆண்களுக்கான வீக் எண்ட் அழகு பராமரிப்பு குறிப்புகளை பற்றி அறிந்து, அதனை செய்து பயன் அடைவோம்.

வெங்காயமும் ஓட்சும்… பல ஆண்களின் முகத்தில் பருக்களும், அதன் வடுக்களும் நிரநர குறியீடாகவே இருக்கும். இதனை சரி செய்ய 1/2 பெரிய வெங்காயம் மற்றும் 2 டீஸ்பூன் ஓட்ஸை எடுத்து கொண்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின் இந்த பேஸ்டை முகத்தில் பூசி மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் நீங்கும்.

முகத்தின் வீக் எண்ட் பிளான்..! வெயிலின் தாக்கத்தால் முகம் பார்க்க மிகவும் மங்கலாக உள்ளதா..? இதற்கு சிறந்த தீர்வாக இந்த அழகு குறிப்பு உதவும். எலுமிச்சை மற்றும் யோகர்டை சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூச வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசினால் முகம் வெண்மையாக மாறும். வாரம் முழுக்க களைத்து போனவர்களின் முகத்திற்கு இது சிறந்த ஃபேஸ் பேக்…!

பாதங்களின் வீக் எண்ட் பிளான்..! எப்போதும் உங்களை நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் அழைத்து செல்வது உங்கள் பாதங்கள்தான்…! உங்களின் உற்ற நண்பனாக என்றும் உங்கள் கூடவே இருந்து வழி நடத்தும் பாதங்களை நாம் பராமரிக்கா விட்டால் அது குற்றமே. உங்கள் பாதங்களை மென்மையாக வைத்து கொள்ள 2 டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் 1 முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக அடித்து பாதங்களுக்கு பூசி மசாஜ் செய்யுங்கள். பின் வெண்ணீரில் கழிவி விடுங்கள். இவை பாதத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மென்மை தரும்.

முடியின் வீக் எண்ட் பிளான்..! முகத்தை எவ்வாறு பாதுகாக்கிறமோ, அதே அளவிற்கு தலை முடியின் அழகையும் பாதுகாக்க வேண்டும். வாரத்தின் கடைசி நாளில் கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளியுங்கள். ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை தலைக்கு தேய்த்து குளித்தால் முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்

முடியின் ஆரோக்கியத்திற்கு… முடியை பராமரிக்க பல வேதி பொருட்களை பயன்படுத்துகின்றோம். இது முடியின் வளர்ச்சியை கெடுப்பதோடு, பலவித நோய்களையும் ஏற்படுத்துமாம். முடியிற்கு வாரத்திற்கு ஒரு முறை இதனை தேய்த்து தலைக்கு குளித்து வந்தால் முடி போஷாக்கு பெரும்.

தேவையானவை :- செம்பருத்தி தேங்காய் எண்ணெய்

செய்முறை :- முதலில் செம்பருத்தி பூவை 20 எடுத்து, அதன் இதழ்களை மட்டும் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். அடுத்து அதனை வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்வு நின்று முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்துடன் இளநரைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கும்.

வழுக்கை பிரச்சினைக்கு… முடியின் ஆரோக்கியம் குறைந்தால் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கையாக மாறும். உங்கள் வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரின்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவி, சிகைக்காய் போட்டு குளியுங்கள். இது சொட்டை இருந்த இடத்தில் முடி வளர செய்யும்.

வறண்ட சருமத்திற்கு… உங்களின் முக சருமம் மிகவும் வறண்டு உள்ளதா..? இதனால் அடிக்கடி முகத்தில் சொரசொரப்பு ஏற்படுகிறதா..? இதற்கு தீர்வு இதோ..!

தேவையானவை :- பால் நெய் அவகேடோ தேன்

செய்முறை :- முகத்தை மென்மையாக மாற்ற 1/2 டீஸ்பூன் பசும்பால் நெய்யுடன் 1/2 டீஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசவும். பிறகு, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசினால் முகத்தின் செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தின் சொரசொரப்புகள் நீங்கும். அல்லது, நன்கு அரைத்த அவகடோ பழத்துடன் தேன் சேர்த்து முகத்தில் பூசினாலும் முகம் மென்மையாகும்.

வீக் எண்டில் கட்டாயம் இதை செய்யணும்..! கண்டிப்பாக நகம், மூக்கில் உள்ள முடிகள், காதில் உள்ள முடிகள் இவை ஒரே வாரத்திற்குள் வளர்ந்திருக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை பக்குவமாக நீக்க வேண்டும். இல்லையேல் இது அபரிமிதமாக வளர்ந்து வினோதமான தோற்றத்தையே உங்களுக்கு கொடுக்கும். அத்துடன் 2 வாரத்திற்கு ஒரு முறை உங்கள் தலை முடிகளை வெட்டுதல் வேண்டும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
2 1535450794

Related posts

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

வெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா?

nathan

உங்களுக்கு அழகான கண்கள் வேண்டுமா??

nathan

வெள்ளையான சருமம்

nathan

இயற்கை பேஷியல்கள்…

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

உங்களுக்கு நெற்றியில் இப்படி பருக்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

வீட்டிலேயே ப்ளீச் எப்படி செய்வது? அருமையாக ரெசிப்பிகள்

nathan