28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
black spot on nose home remedies SECVPF
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ் மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

மூக்கின் மேல் கருப்பு, வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும் கரும்புள்ளிகளை போக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.

மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்
முகத்தின் அழகை குறைத்துக்காட்டுவதில் கரும்புள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும். இதனை போக்க சில வீட்டு வைத்தியங்களை இந்த பகுதியில் காணலாம்.

* கரும்புள்ளிகளை போக்குவதில் பட்டை மற்றும் தேன் மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

* ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.black spot on nose home remedies SECVPF

Related posts

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan

ஆயுர்வேத மூலிகையான வேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan

உங்க சருமத்தை பிரகாசிக்க வைக்க… இந்த 7 பொருட்கள் போதுமாம் தெரியுமா?

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

மூக்கின் மேல் சொரசொரவென்று உள்ளதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!

nathan

பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன

nathan