22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
chicken nuggets
அறுசுவைஅசைவ வகைகள்

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

என்னென்ன தேவை?

அரைக்க

சிக்கன் – 100 கிராம்,
பிரெட் – 1,
பால் – 5 டீஸ்பூன்,
கார்லிக் பவுடர், மிளகாய்த்தூள், சோயா சாஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் – தலா 1/4 டீஸ்பூன்,
முட்டை – 1/2.chicken nuggets

நக்கட்ஸ் செய்ய…

மைதா – 1½ டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 1/2 டீஸ்பூன்,
பிரெட் க்ரம்ஸ் – 1 கப்,
முட்டை – 1,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? 

சிக்கனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைத்துக் கொள்ளவும். பிரெட்டை பாலில் ஊறவைத்துக் கொள்ளவும். பின்பு அரைக்க கொடுத்த அனைத்துப்  பொருட்களையும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பிறகு கையில் எண்ணெய் தடவி சிக்கனை சதுர வடிவில் தட்டி வைக்கவும். ஒரு பவுலில் மைதா மற்றும் கார்ன்ஃப்ளாரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

மற்றொரு பவுலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி முட்டையில் நனைத்து பிரெட் கிரம்ஸில் பிரட்டி நக்கட்ஸ்களை ரெடி செய்து கொள்ளவும். இந்த நக்கட்ஸ்களை 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து  மிதமான சூட்டில் நக்கட்ஸ்களை பொரித்தெடுக்கவும். அப்பொழுதுதான் சிக்கன் உள் பக்கம் வரை வேகும். மையோனைஸ் அல்லது கெட்சப்புடன் பரிமாறவும்.

Related posts

ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி

nathan

சுவையான ரவா கேசரி

nathan

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

கொங்குநாடு சிக்கன் ப்ரை

nathan

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

டேஸ்டி சிக்கன் வறுவல்

nathan

அச்சு முறுக்கு

nathan