24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
pimples problem solution Drumstick leave
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

சமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும்.

முருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும் நீங்கிவிடும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

சரும பொலிவை மேம்படுத்தவும் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முக அழகு கூடும். சருமத்தில் ஏற்படும் நிற மாற்றமும் மறையதொடங்கும். முருங்கை இலை பேஸ்டை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

முதலில் முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன், பன்னீர் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணியால் முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.pimples problem solution Drumstick leave

Related posts

கொஞ்சம் தடவினாலே கருவளையம் காணாமல் போகும் தெரியுமா?

nathan

சரும பொலிவையும் மெருகேற்ற வாழைப்பழ தோல்

nathan

உங்க சருமம் பொலிவு பெற வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்…

nathan

beauty tips.. முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றத்துடன் ஜொலிக்க ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் அற்புத மருத்துவம்..

nathan

சோர்வுற்ற கண்களைப் புதுப்பிக்க எண்ணெய்

nathan

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

உங்க 30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய சில டிப்ஸ்!

nathan

முகத்திற்கு ஃபேஷியல் ஏன் அவசியம்?

nathan