27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
2 1525937159
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா வாஸ்லின் இருந்தா போதும்… ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்…

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசலின் பயன்பாட்டில் உள்ளது. இதை உதடு ஈரப்பதமாக்குவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவது கிடையாது. வெண்மையான பளபளப்பு நிறத்தில் உள்ள இந்த களிம்பில் மருத்துவ குணாதிசய சூத்திரங்கள் பல அடங்கியுள்ளது.

உதடுக்கு தடவுவது மட்டுமின்றி இது பல்வேறு பயன்பாட்டுக்கு உகந்தது. தீக்காயத்தை குணமாக்குவது மற்றும் சொறிக்கு மருந்தாக பயன்படுவதோடு இந்த பெட்ரோலியம் ஜெல்லி ஷூ ஷைனர் உள்ளிட்ட பல வகையான வேலைகளுக்கு உதவியாக இருக்கிறது. அதனால் தான் சொன்னோம்… வாஸ்லின் இருந்தா ஒரே கல்லில் 17 மாங்காய் என்று.

லிப் ஸ்கர்ப் வெறும் உதடு களிம்பை பயன்படுத்துவதால் மட்டும் உங்களது உதடு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது. வாசிலின் லிப் ஸ்கர்ப் உங்களது உதட்டை உறித்து சிறந்த வெளிப்பாட்டை கொடுக்கும். கடைகளில் கிடை க்கும் அதிக விலை கொண்ட உதடு களிம்புகளுக்கு இது சிறந்த எதிரியாகும். கொஞ்சம் வாசலினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்த கொடுத்தால் நல்ல முடிவு கிடைக்கும். இப்போது நீங்கள் பூசியதை துடைத்துவிடுங்கள். இதன் பின்னர் உங்களது உதட்டு களம்பை தடவிட்டால் நீங்கள் வெளியில் செல்ல தயாராகவிடலாம்.

இங்கு சர்க்கரையை விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். சர்க்கரையை பூச தேர்வு செய்யும் போது பிரவுன் சர்க்கரை தேர்வு செய்தால் அது மென்மையாக இருக்கும். வெள்ளை சர்க்கரை தேய்க்கும் போது சிராய்ப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. காஸ்டர் சர்க்கரை இன்னும் சிறந்தது. இனி முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான்.

பாத வெடிப்பு கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாசலின் சிறப்பான சிகி ச்சையை அளிக்கும். இந்த மென்மையான களிம்பு, உங்களது பாதங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதோடு உங்களது முழு உடலையும் மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். இதர தண்ணீர் சார்ந்த லோஷன்களை விட இது அதிக நேரம் தங்கியிருக்கும். இது விரைந்து குணப்படுத்த உதவும்.

தோல் பராமரிப்பு வறண்ட மேல்புற தோலை சரிசெய்யவும், அதை பராமரிக்கவும் வாசலின் களிம்பு திறம்பட செயலாற்றும். மேலும் இது மென்மையான கைகளின் பயன்பாட்டிற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. தூங்குவதற்கு முன்பு விரல் நகங்கள், நகத்தின் அடிப்பகுதியில் வாசலினை கொண்டு மசாஜ் செய்துவிட்டு, பின்னர் அதன் மீது கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் மென்மையான கைகள் மற்றும் பளபளப்பாக ஜொலிக்கும் நெகத்தையும் நீங்கள் காணலாம். நமது தோலில் உள்ள அதே புரோட்டீன்கள் மேல்புற தோலிலும் இருக்கும். அதனால் மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போகவும், வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது வாசலினை தடவினால் அது மேல் தோல் வறண்டு போவதையும், வெடிப்பதையும் தடுத்து குணமாக்கிவிடும்.

சிராய்ப்பு கோடை காலத்தில் ரன்னிங் செல்லும் போது முகத்தில் காற்று அல்லது சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி மற்றும் ஆடைகள் அறுப்பதால் ஏற்படும் சிராய்ப்புகள் வராமல் தடுக்க வாசலின் பயன்படுகிறது. இத்தகைய தாக்குதல் உள்ள பகுதிகளில் வாசலினை சிறிதளவு தடவுவதன் மூலம் அது மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

தோலை எடுப்பாக காட்டுதல் கன்னத்தில் உள்ள எலும்புகள் மற்றும் புருவ எலும்புகள் உள்ள பகுதியில் வாசலினை தடவினால் எடுப்பான தோற்றத்தை காட்டும். மினுமினுக்கும் தோலை பெற இது மலிவு விலையிலான தீர்வாகும்.

முழங்கைகள் வறண்ட மற்றும் வெடிப்பு மிகுந்த முழுங்கைகளில் வாசலினை தூங்குவதற்கு முன்பு தடவினால் அந்த ப குதி மென்மையாகிவிடும்.

காதுகளில் தோடு காதணிகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, பின்னர் ஸ்டட்ஸ்களை பயன்படுத்தினால் வலி இருக்கும். இதை எளிமையாக்க காதுகளில் போடப்பட்டுள்ள ஓட்டை பகுதியில் சிறிதளவு வாசிலினை எடுத்து தடவ வேண்டும். இதன் பின்னர் நீங்கள் தோடுகளை அணிந்தால் வலி இருக்காது.

சுருண்ட கூந்தல் சிறிய அளவு வாசலினை எடுத்து அதை கூந்தலில் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள சுருள்களை அகற்றிவிடும். இதை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் கிரீஸி கூந்தலாக மாற்றிவிடும். கூந்தல் நுனிப் பகுதியில் உள்ள சிக்கலை எடுக்கவும், வறண்ட நிலையைப் போக்கவும் வாசலின் பயன்படுத்தலாம்.

டேபிள் டிராயர்கள் திறக்க நன்றாக திறந்து மூடிய டேபிள் டிராயர்கள் திடீரென சிக்கிக் கொள்ளும். இதை திறப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அதான் டிராயர் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வாசலின் பயன்படுத்தலாம். இதன் பின்னர் அது மென்மையாக திறந்து மூடும்.

செயற்கை இமைமுடி சிறிதளவு பருத்தி சுருளை வாசலினில் நனைத்து அதை செயற்கை கண் இமை முடியை துடைக்க வேண்டும். அப்போது அந்த பசை மென்மையாகும். இதன் பின்னர் வெண்ணீரில் கழுவி விட வேண்டும்.

லிப்ஸ்டிக் கறை உங்களது லிப்ஸ் ஸ்டிக் பற்களில் படாமல் இருக்க வேண்டுமா?. இதை செய்யுங்கள். பளிச்சென்று இருக்கும் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்துவற்கு முன்பு உங்களது பற்களில் வாசலினை தடவிவிடுங்கள். இதன் மூலம் லிப் ஸ்டிக் பற்களில் ஒட்டாது.

கண் புருவங்கள் முரட்டுதனமான புருவங்களை கட்டுப்படுத்தலாம். புருவத்தில் வாசலினை சிறிதளவு தடவினால் புருவம் நன்றாக பணிந்து நல்லதொரு தோற்றத்தை ஏற்படுத்தும்.

ஜிப் சிக்கல் பை உள்ளிட்ட பல அம்சங்களில் இடம்பெற்றிருக்கும் ஜிப் அடிக்கடி சிக்கிக் கொண்டு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த சமயத்தில் ஜிப்பின் இரு புறமும் வாசலினை தடவினால் சிக்கல் இல்லாமல் ஜிப்பை எளிதாக திறந்து மூடலாம்.

தீ மூட்டலாம் இரவு நேரத்தில் குளிர்காய தீ மூட்ட படாதபாடு பட வேண்டியிருக்கும். இதை தவிர்க்க ஒரு சிறிதளவு துணியை வாசலினில் நனைத்து போட்டு பற்ற வைத்தால் தீ எளிதில் பற்றிக் கொள்ளும்.

நெயில்பாலிஷ் பாட்டில் நெயில்பாலிஷ் பாட்டில்களை திறக்கும் போது சிரமப்பட வேண்டியிருக்கும். இந்த பாட்டிலின் கழுத்து பகுதியில் வாசலினை தடவி வைத்தால் பாலிஷ் வறண்டு அந்த பகுதியில் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும். இதனால் திறப்பது எளிதாக இருக்கும்.

பெர்பியூம் உடலில் பெர்பியூம் அடிப்பதற்கு முன்பு கழுத்து மற்றும் கைகளில் வாசலின் தடவிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வாசனை நாள் முழுவதும் நீடிக்கும்.

ஐ மேக்அப் ரிமூவர் வாசலினை பயன்படுத்தி கண்களில் போடப்பட்டுள்ள மேக் அப்பை ஒரு சில விநாடிகளில் எளிதாக அகற்றிவிடலாம். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது. வாசலின் அதிக வேலைகளை செய்யும் போது ஏன் பலவிதமான பொருட்களை காசு கொடுத்து வாங்க வேண்டும்?.

2 1525937159

Related posts

முதுமையில் இளமை…

nathan

சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க டிப்ஸ்

nathan

இதோ ஈஸியான டிப்ஸ்.. எப்போதும் இளமையாக இருக்க ……

nathan

சரும அழகை காக்கும் வாழைப்பழம்

nathan

இதை ட்ரை பண்ணுங்க… மிக பெரிய பிரச்னை பிரசவ கால தழும்புகள் மறைய… Super tips

nathan

தூக்கி எறியும் க்ரீன் டீ பேக்குகளைக் கொண்டு அழகை எப்படி மேம்படுத்தலாம்?

nathan

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்.—-அழகு குறிப்புகள்

nathan

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்(Video)?

nathan

முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீக்க சில டிப்ஸ்.

nathan