27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
201804131147400382 1 tomato salne. L styvpf
சைவம்

தக்காளி கார சால்னா

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுகொள்ள தக்காளி கார சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இட்லிக்கு அருமையான தக்காளி கார சால்னா
தேவையான பொருட்கள் :

தக்காளி – 3,
பெரிய வெங்காயம் – 1,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
தனியா – 1 டீஸ்பூன்,
கிராம்பு – 2,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
இஞ்சி – 1/4 இன்ச்,
பூண்டு – 5 பல்,
பட்டை – சிறிது,
சோம்பு – 1 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
கசகசா – 1 டீஸ்பூன்.

செய்முறை :

தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்த்துருவல் போட்டு வதக்கவும்.

அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பைக் கொதிக்க விடவேண்டும்

குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாடை போய் திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.

இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாறவும்.201804131147400382 1 tomato salne. L styvpf

Related posts

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

மோர்க் குழம்பு

nathan

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

பேபி கார்ன் கிரேவி

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்

nathan

வாழைப்பூ பொடிமாஸ்

nathan

பக்கோடா குழம்பு

nathan