26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
4 1521620951
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சேலை கட்டும்போது எப்படி மேக்கப் போட வேண்டும்?

பெண்கள் அனைவருமே சேலையில் மேலும் அழகாக தெரிவார்கள். எல்லா பெண்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே உடை புடவை மட்டும் தான். வழக்கமாக மாடர்ன் உடை அணியக்கூடிய பெண்களுக்கும், புடவை கச்சிதமாக பொருந்தும்.

நம்மில் பல பேர், நமக்கு பிடித்தமான நடிகைகள், புடவை அணிந்து அதற்குரிய பொருத்தமான மேக்கப்புடன் வரும் போது ஆச்சரியத்துடன் பார்ப்போம். நாமும் அதே மாதிரி சாரியில் இன்னும் அழகாக தெரிய வேண்டும் என விரும்புவோம். ஆனால் அதற்கு அழகான சேலை இருந்தால் மட்டும் போதாது. அதற்குரிய சரியான மேக்கப் போட தெரிந்து இருக்க வேண்டும். அழகான சாரியும், பொருத்தமான மேக்கப்பும் தான் நமது தோற்றத்தை முழுமையாக்கும்.

சேலை அணிதல்

சேலை பாரம்பரியமான உடை என்பதால், அதற்கு என்ன மாதிரியான மேக்கப் போட வேண்டும் என பொதுவாக நாம் குழம்பி போய் விடுகிறோம். சில சமயம் அதிகமான மேக்கப் போடுகின்றோம். சில சமயம் மேக்கப்பே போடுவதில்லை. இதே போன்ற அனைத்து குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு வேண்டுமா ? மேற்கொண்டு இதனை படியுங்க… அடுத்த முறை ஏதாவது விஷேசங்களுக்கு போகும் போது அல்லது சேலை அணியும் போது நீங்கள் இந்த மேக்கப் டிப்ஸ்களை கண்டிப்பாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஐ லைனர்

நேர்த்தியான மற்றும் கிளாசிக் லுக்கில் தோன்ற , ஐ லைனரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஐ லைனர் அல்லது காஜல் கொண்டு மேல் மற்றும் கீழ் இமைகளை அழகுபடுத்தலாம். நாம் இதை கொண்டு மெல்லிய கோடுகளாகவும் கண்களில் வரையலாம் அல்லது அடர்த்தியாக கண்களில் வரைந்து கண்களை எடுப்பாக காட்டலாம். தெளிவான மற்றும் மிருதுவாக கண்கள் தெரிய ஐ லைனர் பயன்படுத்தலாம். கண்களை இன்னும் கொஞ்சம் பெரியதாக காட்ட காஜல் பயன்படுத்தலாம்.

ரெட்ரோ லுக்

நேர்த்தியான தோற்றத்திற்கு ரெட்ரோ லுக்கை கொடுக்கும். அந்த கால நடிகைகள் போல், கண் மையை இறகு போல் வளைத்து வரைவதால், இந்த தோற்றத்தை அடையலாம். இந்த ரெட்ரோ லுக்கை இன்னும் சிறப்பாக காட்ட அடர் சிகப்பு நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்க வேண்டும். சிகப்பு நிற லிப்ஸ்டிக் எப்போதும் முகத்தை எடுப்பாக காட்டுவதால், சேலைக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஃப்ளஸ் பயன்படுத்தி கன்னங்களை அழகாக்கி, இந்த ரெட்ரோ தோற்றத்தை முழுமையாக்கலாம்.

ஆயில் மேக்கப்

வெயில் காலத்தில் ஆயில் மேக்கப் அணிவது தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக வேலைப்பாடுகள் உள்ள புடவை மற்றும் நகைகள் அணியும் போது, ஆயில் மேக்கப் போடுவதால், நல்ல லுக் கிடைக்கும். பொதுவாக வாட்டர் மேக்கப்பை விட இந்த ஆயில் மேக்கப் கொஞ்சம் அடர்த்தியாக தோன்றும். சரியான முறையில் இந்த மேக்கப் போட்டால், சருமம் இயற்கையாக தோற்றமளிக்கும். சருமத்தில் நன்றாக பொருந்தி கொள்ளும். ஆனால் இந்த மேக்கப்பை அதிகம் போட்டுக்கொள்ள கூடாது.

கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்

கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டால் சேலையில் இன்னும் அட்டகாசமாக தோன்றலாம். ஆனால் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போடும் போது, அடர்ந்த நிற லிப்ஸ்டிகை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அடர் நிற லிப்ஸ்டிக் எப்போதும் ஸ்மோக்கி கண்களின் அழகை குறைத்து காட்டும். அதனால் இந்த வகை மேக்கப்புக்கு லிப்ஸ்டிக் போடாமலோ அல்லது மெல்லிய ஷேட்களில் லிப்ஸ்டிக் போடுவது சிறந்தது. கன்னங்களை எடுப்பாக காட்ட, நமக்கு பிடித்த நிறங்களில் ஃப்ளஸ் போட்டு கொள்ளலாம்.

நோ மேக்கப்

மேக்கப் இல்லாமல் சேலை அணிவது தான் தற்போது டிரெண்டிங்காக உள்ளது. புடவை உடுத்தும் போதெல்லாம், பார்த்து பார்த்து மேக்கப் செய்ய வேண்டும் என்று, எந்த கட்டாயமும் கிடையாது. முகத்துக்கு கொஞ்சம் ஃபேஸ், உதடுகளுக்கு மெல்லிய லிப்ஸ்டிக் ஷேட் மற்றும் கண்களுக்கு மஸ்காரா அணிந்த எளிமையான மேக்கப், புடவைக்கு கன கச்சிதமாக பொருந்தும்.

சிகப்பு சேலை

சிகப்பு நிற புடவை எப்போதும் கிளாசிக் லுக் கொடுக்கும். பெண்கள் நிறம் மங்கலாக இருந்தாலும் சரி, இல்லை பளிச்சென்று நிறமுடையவர்களாக இருந்தாலும் சரி, சிகப்பு நிற புடவை எல்லாருக்கும் நன்றாக பொருந்தும். சிகப்பு நிற லிப்ஸ்டிக் இதனை மேலும் அழகாக்கி காட்டும். தோற்றத்தை மேலும் முழுமையாக்க, காஜல் கொண்டு கண்களை ஸ்மெஜ் போல் மேக்கப் போட்டு அசத்தலாம்.

சேலைக்கு பொருத்தமான ஐ ஷேடோ

எந்த கலர் சேலை உடுத்துகிறோமோ, அந்த நிறத்தில் ஐ ஷேடோ போட்டு கொண்டால், நமது தோற்றத்தில் மிகப்பெரும் வித்தியாசத்தை உணரலாம். இது ‘டெசி’ லுக் தரும். புடவை பாரம்பரியமான உடை என்பதால் இந்த மாதிரியான ஐ ஷேடோ ஒத்து வருமா என்று யோசிக்க கூடாது. உடுத்தும் புடவை நிறத்தில் ஐ ஷேடோ, கண்களை இன்னும் அழகாக்கி ஸ்மோக்கி மேக்கப், உதடுகளுக்கு மெல்லிய இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் ஷேட் போன்றவற்றை அணிந்து அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம்.

டிப்ஸ்

அதிக வேலைப்பாடுகள் கொண்ட சேலை அணியும் போது, அதிகமாக மேக்கப் போடக்கூடாது. மேக்கப் இல்லாமலோ அல்லது கொஞ்சமாக மட்டுமே மேக்கப் போட்டு கொள்ள வேண்டும்.சேலையில் வேலைப்பாடுகள் குறைவாக உள்ள போது, மேக்கப் ஜாஸ்தியாக போட்டு கொள்ளலாம்.பிளவுஸ் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது நம்முடைய முக அமைப்பை அதாவது கண்கள், மூக்கு மற்றும் கன்னங்களின் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.4 1521620951

Related posts

ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா…? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

nathan

தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும் தெரியுமா !முயன்று பாருங்கள்

nathan

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிம்பிள் மேக்கப் போடும் முறை

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan

உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில்!..இதோ சில வழிகள்!

sangika

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan