அழகு குறிப்புகள்

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்

 

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்

தலைமுடி வளரவே இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? இதோ, முடி வளர்ச்சியைத் தூண்ட சூப்பரான ஒரு ஹேர் `பேக்’…. ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன், 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் `பேக்’ போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டு வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும். சிலருக்கு முகம் இளமையாக இருக்கும். ஆனால், கைகள் சுருக்கம் விழுந்து வயதான தோற்றத்தைத் தரும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இது. 1 துண்டு தேங்காயுடன், ஒரு பாதாம் பருப்பை சேர்த்து நன்றாக அரைத்து கைகளில் பூசி கழுவுங்கள்.

தொடர்ந்து ஒரு வாரம் இப்படிச் செய்து வந்தாலே சுருத்தம் மறைந்து கைகள் வாழைத்தண்டு போல் மினுமினுக்கும். தேமலும் படையுமாக படையெடுத்து வந்து தொல்லை பண்ணுகிறதா? சூப்பர் வைத்தியம் இருக்கிறது இந்த தேங்காய் பேஸ்ட்டில்…. கருஞ்சீரம்-1 டீஸ்பூன், கொப்பரை தேங்காய்-1 துண்டு… இரண்டையும் அரைத்து தேமல், படை இருக்கும் இடங்களில் `பத்து’ மாதிரி போட்டு, காய்ந்ததும அலசுங்கள்.

தொடர்ந்து இப்படி ஒரு வாரம் போட்டு வர, தேமலும் படையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். நுனி முடியில் பிளவு ஏற்பட்டால், ஒட்டு மொத்த கூந்தலின் வளர்ச்சியும் பாதிப்படையும் இந்தப் பிளவைப் போக்கி, முடி வளர இதோ, ஒரு எளிய வழி…

தேங்காய் பால் – அரை கப்,
பொன்னாங்கண்ணி கீரை ஜுஸ் – அரை கப்…

இரண்டையும் கலந்து 3 டீஸ்பூன் பயத்தமாவை சேர்த்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் இரண்டு முறை உபயோகித்தால், நுனி பிளவு மறைந்து முடி வளரும்.

Related posts

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

ஐஸ் கட்டிகளைப் பற்றியும் அதனால் உண்டாகும் அதிசயிக்கத்தக்க பலன்களையும்…

sangika

முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இதை செய்யுங்கள்!….

sangika

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

சூப்பர் டிப்ஸ்,,, கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால் எப்படி குறைப்பது?

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

பெண்களுக்கும் முகத்தில் ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம் ?

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்

nathan