8f3c1b565bbce990d3c3edc37fb0f2cc
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூக்கில் முள் போன்று உள்ளதா?இதை முயன்று பாருங்கள்..

முகத்தின் அழகை குறைத்துக்காட்டுவதில் கரும்புள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும். இதனை போக்க சில வீட்டு வைத்தியங்களை இந்த பகுதியில் காணலாம்.

பட்டை மற்றும் தேன்:
பட்டை மற்றும் தேன் இதற்கு மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.
ஒட்ஸ் மற்றும் தேன் : ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்

கிரீன் டீ கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

உப்பு மற்றும் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்

முல்தானி மெட்டி முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.8f3c1b565bbce990d3c3edc37fb0f2cc

Related posts

எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

முகத்தின் அழகு பழத்தில் தெரியும்! அழகு குறிப்புகள்!!

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan

முக அழகை இரட்டிப்பாக மாற்றும் அஞ்சறை பெட்டியின் மசாலா பொருட்கள்..!சூப்பர் டிப்ஸ்…….

nathan

வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை,வீட்டிலேயே நீக்க ஈஸியான வழிகள் இங்கே!

nathan

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

nathan