31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள் மற்றும் பருக்களைப் போக்கும் சூப்பர் டிப்ஸ்!

அக்காலத்தில் நம் பாட்டிமார்கள் அழகு நிலையங்களுக்குச் சென்றா, தங்களது அழகைப் பராமரித்தார்கள். நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமலும் இருந்தது.

இக்கட்டுரையில் நம் முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.

பெர்ரி ஜூஸ் கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

பூண்டு பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

ஜிங்க் மற்றும் செலினியம் ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

Related posts

நைட் தூங்கும் போது இப்படி ஃபுரூட் ஃபேஷியல் போடுங்க.. சூப்பர் டிப்ஸ்…

nathan

தூய்மையான முகம் எப்படி பெறலாம்? சில சிறந்த ஆயுர்வேத குறிப்புகள் !!

nathan

வில் போல புருவம் வேணுமா? இதை ட்ரை பண்ணுங்களேன்.!ஈஸி டிப்ஸ்

nathan

உங்க முகத்தை வெள்ளையாக மாற்ற வீட்டிலேயே ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிப்பது எப்படி…?

nathan

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்

nathan

முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!அப்ப தினமும் செய்யுங்க…

nathan

ஒரு சிறிய விதையில் இவ்வளவு நன்மைகளா..?

sangika

தினமும் உங்கள் ச‌ருமதை பாதுகாக்கும் ஒரு சில வழி முறைகள்

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika