27.7 C
Chennai
Thursday, Jul 17, 2025
12 hibiscus benefits 120911 1
தலைமுடி சிகிச்சை

செம்பருத்தி மாஸ்க்கை எப்படி கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க….

12 hibiscus benefits 120911 1
செம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள் அற்புதமான கண்டிஷனர். தலைமுடியை பொடுகிலிருந்து காப்பாற்றுகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ,சி மற்றும் முடி வளர அடிப்படை தேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.
செம்பருத்தி மாஸ்க் செய்வது எப்படி?
செம்பருத்தியை தனியாக இல்லாமல் யோகார்ட் அல்லது வெந்தயத்துடன் சேர்த்து கலவையை தயாரிக்கவும். இது கூந்தலை இன்னும் அழகாக்கும், பலப்படுத்தும்.
செம்பருத்தி – யோகார்ட் கலவை செய்யும் முறை!
ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் – 10
யோகார்ட் – 4 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
ரோஸ்மெரி எண்ணெய் – சில துளிகள்(விருப்பமிருந்தால்)
செம்பருத்தியின் தண்டினையும், அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும். அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும். தேவைக்கேற்ப நீர்விடவும். அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.
விருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம். ரோஸ்மெரி எண்ணெய் கூந்தல் வளர உதவி புரிகிறது. இப்போது இந்த கலவையை தலைமுடியின் வேர் கால்களிலிருந்து தடவ வேண்டும். முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.
செம்பருத்தி – வெந்தய கலவை செய்யும் முறை!
செம்பருத்தி இலைகள் – கை நிறைய
ஊற வைத்த வெந்தயம் – 2 தேக்கரண்டி (இரவில் ஊற வைத்து மறுநாள் உபயோகப்படுத்த வேண்டும்)
செம்பருத்தி இலையை அழுக்கு போக நன்கு கழுவ வேண்டும். அதன் காம்பினை அகற்றி மிக்ஸியில் நைசாக அரைக்கவும். ஊற வைத்த வெந்தயத்தையும் நன்கு அரைத்து, செம்பருத்தி இலை பேஸ்ட்டுடன் நன்கு கலக்கவும்.
இப்போது அந்த கலவையை தலைமுடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தலின் வலிமையை அதிகப்படுத்தும்.
இந்த இரண்டு மாஸ்க்கையும் வாரம் ஒரு முறை என மாற்றி மாற்றி தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு தொல்லை மற்றும் அனைத்து விதமாக கூந்தல் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

Related posts

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

பொடுகு என்றால் என்ன ? பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

nathan

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

nathan

பொடுகை நீக்கி, மேனியை பலபலக்கவைக்கும் ஆலிவ் ஆயில்!

nathan

பொதுவாக ஏன் ஆண்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறது என உங்களுக்கு தெரியுமா??

nathan

பிசுபிசுப்பான எண்ணெய் தலைமுடியை தவிர்க்க கீழ் உள்ளவற்றை பயன்படுத்துங்கள்:

nathan

உங்கள் தலைமுடியை நீளமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மாற்ற எலுமிச்சை சாற்றை பயன்படுத்த 5 வழிகள் உள்ளன.

nathan

தினமும் 100 முடி உதிர்ந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan