26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
oily skin care tips
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ப்யூடி டிப்ஸ் !

“என்ன உன் கை இவ்வளவு சொரசொரப்பா இருக்கு…?”என்று எல்லோரும் உங்களைக் கிண்டல் செய்கிறார்களா? தினமும் இரவு படுக்கப் போகும் முன்பு வாஸ்லினை அப்ளை செய்து விட்டுத் தூங்குங்கள். கமெண்ட் அடிப்பவர்கள் கப்_சிப் ஆகிவிடுவார்கள்.oily skin care tips
சொர சொர கை, கால்களை ஸாஃப்ட்டாக்க ஒரு ஈஸி வழி. இஞ்சியை நறுக்கி, தண்ணீரில் போட்டு இருபது நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு ஆற வைத்து வடிகட்டி, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சேர்த்துக் குளித்துப் பாருங்களேன். கை, கால்கள் படு ஸாஃப்ட்டாக மாறிவிடும்.

சுத்தமான பளிச் நகங்கள் வேண்டுமா? டூத்பேஸ்ட்டை கொஞ்சம் எடுத்து நகங்களில் ஸ்க்ரப் செய்யுங்கள். அவ்வளவுதான். நகங்கள் மின்னும்…

அதிகமான எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தினரா நீங்கள்? இரவு படுப்பதற்கு முன் சோப்பால் தேய்த்து நன்கு குளியுங்கள். இப்படி செய்து வந்தால் உங்கள் சருமத்தின் இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். காலையில் குளிப்பதைவிட இரவில் இப்படி குளிப்பது இறந்த செல்களை அதிகம் போக்கும்.

இரண்டு பங்கு ஷாம்பூ, ஒரு பங்கு எண்ணெய் (ஆலிவ், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் என்று எதுவாகவும் இருக்கலாம்) அத்துடன் நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம் எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கப் போகும் முன், இந்தக் கலவையை நன்கு குலுக்கி சில சொட்டுக்களை தண்ணீரில் சேர்த்துக் குளித்துப் பாருங்கள், சருமம் படு ஸாஃப்ட்டாக இருக்கும்.

ஒரு கப் கெட்டித் தயிருடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸையும், ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸையும் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் நன்றாகத் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் பாருங்கள்… உங்கள் முகம் ஜொலி ஜொலிப்பதை!

திடீரென பார்ட்டிக்குப் போக வேண்டும். 15 நிமிடம் வரை ஊற விட நேரம் இல்லையென்றால் மேற்சொன்ன பேஸ்ட்டுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேனையும், 2 டேபிள்ஸ்பூன் பாலையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். முழங்கால், முழங்கை, முகம், பாதங்களில் அப்ளை செய்து சில நிமிடங்களில் கழுவி விடுங்கள். முகம் சும்மா டாலடிக்கும்.

முகப்பரு மறைய ஒரு ஈஸி வழி சொல்லட்டுமா?கேரட்டை நன்றாக அரைத்து, முகத்தில் தடவுங்கள். முகப்பருவுக்கும், கேரட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கேரட்டில் இருக்கும் விட்டமின்_சி பருக்களை உருவாக்கும் துளைகளை முழுவதுமாக க்ளென்ஸ் செய்து விடும்.

சருமம் பட்டுப் போல் வழுக்கிக் கொண்டு வர வேண்டுமா? வாழைப்பழத்தை பாலுடன் கலந்து முகம், முழங்கால், முழங்கைகளில் தடவுங்கள். பிறகென்ன…? எல்லோர் கண்களும் உங்கள் மேல்தான்!

மாசு மருவில்லாத முகம் வேண்டுமா? (குறிப்பாக சிவப்பு, கறுப்பு நிறத் திட்டுக்கள் முகத்தை ஒரு வழி செய்து விடும்.) பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடி போட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது. (இந்த மெலனின் தான் சருமத்தின் நிறத்தையே முடிவு செய்கிறது)

முட்டிகழுத்துப் பகுதிகள் கறுப்பாக இருக்கிறதா? கடுகு எண்ணெயை அந்த இடங்களில் நன்றாகத் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கடலைமாவால் சுத்தம் செய்யுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் கருமை மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

Related posts

மேக்கப் மூலம் ஆளுமையை எப்படி வெளிப்படுத்துவது

nathan

கருமை மாறி முகத்துக்கு பொலிவு தரும் கற்றாழை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்களை என்றும் இளமையாக வைக்கும்…!

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

nathan

அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இடையுறு… வெளியான காணொளி

nathan

ரஜினி சொல்லியும் கேட்காத தனுஷ் !

nathan