முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால்…
உங்களுடைய சருமம் ரொம்பவே ஆயிலியாக இருந்தால், இந்தக் கரும்புள்ளிகள் அழைக்காமலேயே உங்கள் முகத்தில் வந்துவிடும்.
எப்படிச் சரி செய்வது?
ேஐஸ் கட்டியை சுத்தமான கர்சீப்பில் சுற்றி, அதைக் கொண்டு முகத்தை ஒற்றியெடுங்கள். இப்படிச் செய்தால் முகத்தில் வழியும் எண்ணெய், கண்ட்ரோல் ஆகும்.
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தேனுடன் பிசைந்து கரும்புள்ளிகள் மீது தடவி வரவும்.
லேவண்டர் ஆயிலை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
எப்படி மறைப்பது?
கன்சீலரை சற்று அதிகமாக எடுத்து பிரஷ்ஷின் மூலமாக முகத்தில் தடவி அதன் மீது ட்ரான்ஸுலின்ட் பவுடரை அப்ளை செய்தால், முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதே தெரியாது.
முகத்தில் முகப்பரு மற்றும்
தழும்பு இருந்தால்…
முகப்பருவே ஒரு தொல்லை என்றால், அதைவிட பெருந்தொல்லை அதைக் கிள்ளி விட்டால் வரும் தழும்பு.
எப்படிச் சரி செய்வது?
உங்களுடையது எண்ணெய்ப் பசை சருமம் என்றால் தக்காளி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மூன்றிலும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், முகப்பருவும் சரியாகிவிடும். அதைக் கிள்ளினால் வரும் தழும்பும் சரியாகிவிடும்.உங்களுடையது நார்மல் சருமம் என்றால் ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸ், 4 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வாருங்கள் போதும்.
எப்படி மறைப்பது?
இதற்கும் கன்சீலரை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்து, அதன் மீது பூனை நாக்கு பிரஷ்ஷால் லேசாக டிரான்ஸுலின்ட் பவுடரை டச் செய்யுங்கள். தழும்பு சற்று ஆழமாக இருந்தால் தொடர்ந்து ஃபேஷியல், ஸ்கரப்பிங் என்று சரியான இடைவெளியில் செய்து வாருங்கள்.
முகத்தில் லேசான தீக்காயம் இருந்தால்…
முகத்தில் லேசான தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெஸ்ட் தீர்வு இருக்கிறது.
எப்படிச் சரி செய்வது?
சேோற்றுக் கற்றாழையைக் கீறி, அந்த ஜெல்லை அப்படியே தீக்காயத்தின் மீது தடவி வாருங்கள். லேவண்டர் ஆயிலைத் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் எங்கே என்று தேடினாலும் கிடைக்காது. தீக்காயத்தினால் ஏற்பட்ட தழும்பு மறைய வேண்டுமென்றால் விட்டமின் `ஈ’ ஆயிலை அதன் மீது தொடர்ந்து தடவுங்கள்.
எப்படி மறைப்பது?
இதற்கும் பிரஷ்ஷினால் கன்சீலரை அப்ளை செய்து, அதன் மீது பவுடரை ஸ்பான்ஜால் தொட்டுத் தடவுங்கள்!
உப்பிய கண்களோ, கருவளையமோ இருந்தால்…
எத்தனை அழகான கண்களும் வீங்கி இருந்தாலோ, அதைச் சுற்றி கருவளையம் இருந்தாலோ எடுபடாமல் போய்விடும்.
எப்படிச் சரி செய்வது?
நேரத்திற்குத் தூங்கினாலே கண்கள் வீங்காது. தவிர உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை வட்டமாக சீவி அதை கண்களின் மீது 10 நிமிடம் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் இரண்டுமே சரியாகிவிடும்.
எப்படி மறைப்பது?
உங்கள் ஒரிஜனல் ஸ்கின் கலரை விட லைட் கலரில் கன்சீலரை கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தின் மீது தடவி அதன் மீது உங்களின் ஸ்கின் கலர் பவுடர் ஃபவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள்.
கண்களைச் சுற்றி சுருக்கம் விழுந்தால்…
சட்டென்று வயதைக் கூட்டிக் காட்டிவிடும். இந்தப் பிரச்னைக்கு என்ன செய்யலாம்?
எப்படிச் சரி செய்வது?
சுருக்கம் உள்ள பகுதிகளில் விட்டமின் `ஈ’ ஆயிலையோ அல்லது பாதாம் ஆயிலையோ தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரை கண்கள் மீது மெதுவாக வாரி அடியுங்கள்.
எப்படி மறைப்பது?
மை வைக்கும் இடத்தில் தரமான `ஐ ஜெல்’லைத் தடவி பத்து நிமிடம் கழித்து ஃபவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள். சுருக்கம் தெரியாது