30.1 C
Chennai
Tuesday, Jul 14, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது

உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால் சாப்பிடுவது எப்படி மிகவும் நல்லதோ அதேபோல் அழகிற்கும் அசர வைக்க்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது.
தேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
* கேரட் சாறு – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன் இநத் இரண்டையும் நன்றாக கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும்.
* முல்தானிமட்டி – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.
* உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன், பச்சை பயிறு மாவு – 1 டீஸ்பூன் இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை குணப்படுத்த தேங்காய் எண்ணெய் தடவுவது சரியா?

nathan

இதை நீங்களே பாருங்க.! துளி கூட மேக்கப் இல்லாமல் 15வயது பெண் போல் கியூட்டாக இருக்கும் நயன்தாரா.!

nathan

முயன்று பாருங்கள் பித்தவெடிப்பை சரிசெய்யும் மருத்துவ குறிப்புகள்!!

nathan

உங்களுக்கு முகத்தில் மச்சம் இருக்கிறதா? அப்ப இத படிங்க!

nathan

இதோ எளிய நிவாரணம்! உங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா? தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த…!

nathan

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan

லதா ரஜினிகாந்த் செய்த காரியம்! மகளின் வாழ்க்கைக்கு இப்படி மாறிட்டாரே

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

nathan

மனம் திறந்த விக்கி! ரெண்டு புள்ளைக்கு அப்பான்னு என்னாலே நம்ப முடியல

nathan