முடி உதிர்தல் தொடர்ந்து இருந்தால் அடர்த்தி குறைந்து எலிவால் போல் ஆய்விடுகிறது. முடி உதிர்விற்கு நிறைய பேர் பல காரணங்கள் சொன்னாலும் உண்மையில் மிக முக்கிய காரணம் வறட்சி, அதனால் வரக் கூடிய கடுமையான பொடுகுத்தொல்லைதான்.
இந்த பிரச்சனைக்கு நிறைய தீர்வு எடுத்து சோர்ந்து போயிருங்கீங்களா? இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் நிச்சயம் பலன் தரும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் முடியின் தன்மை வேறுபடும். அதனால் சிலக் குறிப்புகள் உங்களுக்கு பயன் தராமல் போயிருக்கலாம்.
ஆனால் இவைகள் எல்லா முடித் தன்மைக்கும் ஏற்ற குறிப்புகள். ஆகவே இவை உங்களுக்கு அடர்த்தியான முடியை தரும் என்பதில் சந்தேகமில்லை. நேரமும் குறைவு.அதிகம் தேவைப்படாது. வாரம் இருமுறை என்று பயன்படுத்துங்கள். பலனளித்தவுடன் எங்களுக்கு கமெண்டிடுங்கள்.
பொடுகை 2 நாட்களில் கட்டுப்படுத்த :
குறிப்பு -1 :
சம அளவாக தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்க்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசலாம்.
குறிப்பு 2 :
எலுமிச்சை சாறு மற்றும் நீர் சம அளவு எடுத்து அதில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் கழித்து அந்த கலவையை அரைத்து தலையில் தடவுங்கள் 15 நிமிடம் இருக்க வேண்டும். பின் இளஞ்சூடான நீரில் அலசவேண்டும். இப்படிச் செய்தால் பொடுகு எட்டி கூட பார்க்காது. முடி அடர்த்தி நீங்கள் ஆச்சரியபப்டும்படி வளரும்.
குறிப்பு -3 :
மிக எளிதான குறிப்பு இது. புளித்த தயிரை வாரம் 3 நாட்கள் தலையில் தடவுங்கள் 1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு, முடி உதிர்தல் உடனடியாக கட்டுப்படும்.
குறிப்பு -4 : குளிப்பதற்கு முன் சமையல் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி 10 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் உடனே நல்ல பலன் தெரியும்.
குறிப்பு -5 தேயிலை மர எண்ணெய் 2 துளி எடுத்து ஆலிவ் எண்ணெயில் கலந்து தலைக்கு தேயுங்கள். 15 நிமிடம் குளித்தால் பொடுகு ஓடிவிடும்.
குறிப்பு -6 ஆப்பிள் சைடர் வினிகர் 2 ஸ்பூன் எடுத்து கால் டம்ளர் நீர் கலந்து அந்த கலவையால் தலைமுடிக்கு மசாஜ் செய்யவும். முடி உதிர்தல் நாளடைவில் கட்டுப்படும். பொடுகு மறையும்.
குறிப்பு -7 மருதாணிப் பொடியில் அரை மூடி எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் தேயிலை டிகாஷன் கலந்து தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள்.
குறிப்பு – 8 வேப்பிலையை அரைத்து தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் ஒரே வாரத்தில் பொடுகு, முடி உதிர்தல் நிற்கும்.
குறிப்பு – 9 : முல்தானி மட்டியில் சிறிது நீர் மற்றும் ஒரு மூடி எலுமிச்சை சாறை கலந்து தலைக்கு தடவவும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை நன்றாக அலசுங்கள். இவ்வாறு செய்தால் முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும், பொடுகில்லாமல் இருக்கும்.
குறிப்பு -10 : ஆரஞ்சு தோல் பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து மைல்ட் ஷாம்பு போட்டு கூந்தலை அலச வேண்டும்.
முடி அடர்த்தியாக வளர தேயிலை தைலம் : தேயிலை தைலம் : ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று டேபிள் ஸ்பூன் தேயிலையைப் போட்டு காய்ச்சி தைலப்பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி கருமையாகவும் செழித்தும் அடர்த்தியாகவும் வளரும்.
வேப்பிலை தெரபி : தேவையானவை : வேப்பிலை ஜூஸ் – 1/2 கப் பீட்ரூட் ஜூஸ் – 1/4 கப் தேங்காய் பால்- 1/4 கப் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை : மேற்கண்ட எல்லாவற்றையும் கலந்து தலைமுடியில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் 2 நாட்கள் செய்தால் செம்பட்டை முடி, வறட்சி, பொடுகு எல்லாம் மறைந்து ஆரோக்கியமான பளபளப்புடன் உங்கள் கூந்தல் இருப்பதை காண்பீர்கள்.
வெந்தய தெரபி : தேவையானவை : வெந்தயம்- 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் – 1 கப் நீர் – 1 கப்
செய்முறை : ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட் செய்து அதனுடன் ஆப்பிள் சைடர் வினிகர், நீர் கலந்து தலையில் தேய்க்கவும். முடியின் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலசலாம். இது மிகவும் நல்ல நிவாரணம் தரும்.
கற்றாழை தெரபி : ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து தலைமுடியில் தடவுங்கள். இது முடி உதிர்தலை முற்றிலும் தடுத்து அடர்த்தியை பல மடங்கு தரும்.
வெங்காய தெரபி : சிகப்பு வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதன் சாற்றைப் பிழிந்து எடுங்கள். அதனுடன் தேன் கலந்து உங்கள் தலையின் வேர்க்கால்கள் மீது கவனமாக தடவுங்கள். பின் 15 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள்.
பூண்டு எண்ணெய் தெரபி : பூண்டு முடி உதிர்வை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் வீட்டு சிகிச்சை தான் பூண்டு. புதிய முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பயன்படுத்தும் முறை: நசுக்கிய பூண்டு சிலவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இதனை முடியின் வேர்களில் நன்றாக தடவவும். தலையை நன்றாக கழுவுங்கள். நல்ல பலனைப் பெற இந்த சிகிச்சையை வாரம் மூன்று முறை பயன்படுத்தவும்.
சீரகம் சீரகம் கூந்தலை அடர்த்தியாக்க உதவும். பயன்படுத்தும் முறை: ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயில் சீரகத்தை ஊற வைக்கவும். இரவு முழுவதும் அது ஊறட்டும். மறுநாள் காலை, அதனை தலையில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு மிதமான ஷாம்பு கொண்டு கழுவுங்கள். நீங்களே ஆச்சரியப்படும்படி முடி வளரும்
வேப்பம் பூ : வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
கடலைமாவு : இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை கட்டுப்படும். முடி செழித்து வளரும்.