பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு சருமம் பளபளப்பாக மாறும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழக பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் பழங்கள், காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகள், நிறமிகள் சருமத்தின் நிறத்தை பொலிவுறச்செய்கின்றன. அது மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கச்செய்கிறது என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 35 மாணவர்கள் பங்கேற்றனர் அவர்களுக்கு உணவாக பழங்களும், காய்கறிகளும் வழங்கப்பட்டன. 6 வாரங்களில் அவர்களின் சருமத்தை பரிசோதனை செய்தபோது சருமத்தில் பளபளப்பு அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
இதேபோல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் நிறைய பழங்களும் காய்களும் சாப்பிடுங்கள். ஆறே வாரங்களில் உடலில் வனப்பும் மினுமினுப்பும் கூடும் என்று கண்டறிந்துள்ளனர். காய்கறிகள், பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கும் கரோட்டினாய்டுகளும் தாவர வேதிப் பொருட்களும் நம் உடலில் பொலிவும், கவர்ச்சியும் தரும் மாயாஜாலங்கள் செய்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.