28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
201709140900081825 1 honeylemontea. L styvpf
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்!!

எந்த வகை சருமத்தினர் எந்த முறையில் எலுமிச்சையை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்
நிறைய செலவழித்தால்தான் அழகாக முடியும் என்றெல்லாம் கிடையாது. வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே நீங்கள் அழகாகலாம். எல்லாருக்கும் எளிதாக கிடைக்கும் எலுமிச்சை பழத்தைக்கொண்டு செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க்குகள் பற்றி இங்கே காணலாம்.

முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளி இருப்பவர்கள் இந்த பேஸ்மாஸ்க் பயன்படுத்துங்கள். முட்டை -1, எலுமிச்சை சாறு – மூன்று டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – சிறிதளவு, வெள்ளைக்கருவில் அதில் லெமன் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். சுமார் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

கெமிக்கல் ப்ராடெக்ட்டுகள் எதுவும் உங்கள் சருமத்திற்கு சேராத அளவிற்கு உங்கள் ஸ்கின் சென்சிட்டிவ் ஆனதா? அப்படியெனில் இதை முயற்சிக்கலாம். தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – சிறிதளவு எடுத்து மூன்றையும் ஒன்றாக கலக்கி முகத்தில் பூசுங்கள். அது நன்றாக காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

என்ன சோப், க்ரீம் பயன்படுத்தினாலும், முகத்தில் எண்ணெய் வழிவது நிற்கவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இதனை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். முல்தானி மெட்டி பவுடர், லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். 70 சதவீதம் காய்ந்ததும் கழுவிவிடலாம். முழுவதும் காய வைக்க வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் சேர்த்து உறிஞ்சிவிடும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் என்ன மேக்கப் போட்டாலும் அது நிக்காது, அத்துடன் சருமம் வறண்டு இருப்பதால் ஸ்கின் அலர்ஜி இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். இவர்கள் லெமன் ஜூஸ், தேன், மற்றும் பாதாம் எண்ணெய் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.201709140900081825 1 honeylemontea. L styvpf

Related posts

பள பள அழகு தரும் பப்பாளி

nathan

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

nathan

வெளியே அழகு… உள்ளே ஆபத்து!

nathan

எல்லாவிதமான சரும பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அருமையான அழகுக் குறிப்புகள்!!

nathan

கோடையில் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை பயன்படுத்துங்க

nathan

சரும பொலிவைக் அதிகரிக்க வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிக்கலாம்?

nathan

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

nathan

கழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு

nathan