Facial steaming
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன.
நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்.Facial steaming

நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே செய்ய கூடியது.

ஆனால் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தும்போது சரும சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிகமான பருக்கள் இருக்கும்போது வாரத்திற்கு 2 முறை இதனை மேற்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்
லவங்க பட்டை
க்ரீன் டீ
தண்ணீர்

க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை , 1 ஸ்பூன் க்ரீ டீ ஆகியவற்றை போடவும். பிறகு அடுப்பை அணைக்கவும். ஒரு ஸ்பூனால் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

ஒரு கனமான போர்வை அல்லது துண்டு எடுத்து உங்களை முழுவதும் போர்த்தி கொள்ளவும். இப்போது அந்த நீரில் இருந்து வரும் ஆவியை நீங்கள் நுகர தொடங்கலாம். தண்ணீர் மிக அதிகமாக கொதிக்க கூடாது. அது சருமடத்தை சேதமடைய செய்யும். ஓரளவு ஆவி வரும் அளவுக்கு கொதிக்க வைப்பது நலம்.

சென்சிடிவ் சருமமாக இருந்தால் 8-10 நிமிடங்கள் ஆவி பிடிப்பது நலம். எண்ணெய் சருமமாக இருக்கும்போது 20 நிமிடங்கள் செய்யலாம். கண்களை மூடிக்கொண்டு ஆவியை முகத்தில் நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக சூடு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் சற்று போர்வையை விலக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். முடிந்த அளவு ஆவியை எடுத்துக்கொண்டு, போர்வையை விலக்கி முகத்தை காய விடவும். பின்பு டோனர் அல்லது மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தலாம்.

கிரீன் டீ வயது முதிர்வை தடுக்கிறது. சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மஞ்சளில் இருக்கு அதிக அளவு சல்பர் ஆன்டிபயாடிக் போல் செயல்பட்டு பருக்கள் மறைவதற்கு முக்கிய காரணமாகிறது.

லவங்க பட்டை சருமத்தின் துளைகளை திறந்து சருமத்துக்குள் ஊடுருவி சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. இந்த எளிய முறை நீராவி பேஷியலை செய்வதன் மூலம் பருக்கள் குறைந்து, எண்ணெய் பசை சருமம் பொலிவாக காணப்படும்.

Related posts

உங்க மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை மாயமாய் மறைய சூப்பர் டிப்ஸ்….

nathan

கண்களை சுற்றி சுருக்கங்கள் வருவது எதனால்? எப்படி அதனை போக்குவது?

nathan

லவங்கப் பட்டை கொண்டு தயாரிக்கும் மாஸ்க் பற்றி கேள்விப்பட்டதுண்டா? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்!

sangika

புத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ்

nathan

முயன்று பாருங்கள்.. கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகள்!

nathan

சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகள்….

sangika

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

கிரங்கி போன ரசிகர்கள்! புடவையில் அசத்தும் லொஸ்லியா….

nathan