26.5 C
Chennai
Thursday, Jul 24, 2025
14 1397452573 7 tomatojuice
முகப் பராமரிப்பு

உங்களுக்கு பொலிவான தோற்றத்தைத் தரும் ‘தக்காளி ஃபேஸ் பேக்’

தக்காளியானது இயற்கையில் எளிதில் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இப்போது அந்த தக்காளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வதென்று பார்ப்போம்!!!

1. தக்காளியை வேக வைத்து தோலை நீக்கி, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு அதனைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சூரிய ஒளி பட்டுப் பட்டு பழுப்பு நிறமாகிய இடம் பொலிவு பெற்று அழகுடன் காணப்படும்.

2. வேக வைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

3. மூல்தாணி மெட்டியுடன் தக்காளிச் சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வேண்டும், இல்லையென்றால் உள்ளங்கையை நினைத்து மாஸ்க் மீது மசாஜ் போல் செய்ய வேண்டும். இப்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்து பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், முகப்பரு, கருவளையம் போன்றவை போய்விடும்.

4. சந்தனப்பவுடர் கூட ஒரு சிறந்த முகத்தை அழகுப்படுத்த உதவும் அழகுப் பொருள். ஒரு பௌலில் சிறிது தக்காளிச் சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனப்பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

5. சாதாரணமாக தக்காளியை வேக வைத்து, அதனை மசித்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கருப்பு நீங்கி முகம் அழகாகக் காணப்படும்.

6. எங்கேனும் அவசரமாக செல்ல வேண்டும் என்றால் அப்போது வேக வைத்த தக்காளியுடன் 2 ஸ்பூன் பாலை விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிச் சென்றால், முகமானது பிரகாசமாக இருக்கும்.14 1397452573 7 tomatojuice

Related posts

அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!

nathan

கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

sangika

ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

இதோ உங்க பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

nathan

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

முகத்தை ஜொலிக்க வைக்க எளிய முறை!…

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் கரும்புள்ளிக்கு குட்-பை சொல்லணுமா?அப்ப இத படிங்க!

nathan

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan

தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும் தெரியுமா !முயன்று பாருங்கள்

nathan