34 C
Chennai
Wednesday, May 28, 2025
201710171508515576 1 Athirasam. L styvpf
அறுசுவைஇனிப்பு வகைகள்

வெல்ல அதிரசம்

தேவையான பொருட்கள் :

அரிசி – அரை கிலோ
வெல்லம் – 300 கிராம்
ஏலக்காய் – சிறிதளவு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.201710171508515576 1 Athirasam. L styvpf

செய்முறை :

பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ள போதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும்.

வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.

பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும்.

ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெயை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும்.

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார்.

மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

Related posts

லாப்சி அல்வா

nathan

குறைவில்லாச் சுவையில் குடைமிளகாய் அல்வா!

nathan

வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது….

sangika

சுவையான கேரட் அல்வா

nathan

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

nathan

சுவையான முருங்கை கீரை வடை……

sangika

பேரீச்சை பாதாம் லட்டு

nathan

ரசகுல்லா

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan