முகத்தின் அழகை மெருகேற்றுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. முகம் என்ன தான் எலுமிச்சை பழம் போன்ற நிறத்தில் இருந்தாலும் கூட உதடுகள் கருப்பாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது. அதோடு இல்லாமல் முகமும் கலையிழந்து இருக்கும். உதடுகள் கருப்பாக பல காரணங்கள் உள்ளன. புகைப்பிடிப்பது, சூடான உணவுகளை சாப்பிடுவது, டீ, காபி ஆகியவற்றை குடிப்பது போன்றவை உதடுகளை கருப்பாக்கும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்
உதடுகளை கடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். இதனை செய்வதால் உதடுகளில் புண்கள் ஏற்பட்டு உதடுகள் கருப்பாக மாறிவிடும். இந்த பகுதியில் எலுமிச்சையை வைத்து சில நாட்களிலேயே உதடுகளை எப்படி சிவப்பாக மாற்றலாம் என்பது பற்றி விரிவாக காணலாம்.
எலுமிச்சை எலுமிச்சை ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். இது முகத்தில் உள்ள கருமை, கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள ஆசிட் தன்மையானது உங்களுக்கு பெருமளவில் உதவியாக உள்ளது. இந்த எலுமிச்சையில் உள்ள பிளீச்சிங் தன்மையானது உங்களது கருமையான உதடுகளை சிவந்த நிறமாக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இது உதடுகளுக்கான மிகச்சிறந்த வீட்டு மருத்துவ பொருளாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை…
இரவில் அழகை பராமரிக்க இரவு நேரமானது மிகச்சிறந்த நேரமாக இருக்கும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இரவு நேரத்தில் உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்க அதிக நேரம் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களது உதடுகளை பராமரிக்க ஒரு சில விநாடிகளை செலவழித்தால் மட்டுமே போதும்.
எலுமிச்சை சாறு.. தினமும் இரவு நேரத்தில் நீங்கள் உறங்குவதற்கு முன்பாக, எலுமிச்சையை இரண்டாக அறுத்து, அதில் இருந்து சிறிதளவு சாறை எடுத்து உங்களது உதட்டில் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ஒவ்வொரு இரவு வேளைகளிலும் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நீங்கள் இந்த முறையை தொடர்ந்து, இரண்டு மாதங்கள் வரை விடாமல் செய்து வந்தால் உங்களுக்கு மிகச் சிறந்த பலன் கிடைப்பது உறுதி.
எலுமிச்சை, சர்க்கரை நீங்கள் இந்த இரண்டாவது வழிமுறையின் மூலமாக, சில வாரங்களிலேயே உங்களது உதட்டை மிளிர செய்யலாம். இதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் தான். அதுவும் உங்களது வீட்டிலேயே இருக்க கூடிய பொருள் தான். உங்களது வீட்டில் எப்போதுமே சர்க்கரை இருக்கும். எலுமிச்சையும் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பொருள் தான். இந்த எலுமிச்சையை நான்கு அல்லது தடிமனான துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டை எடுத்து, அதன் மீது சிறிதளவு சர்க்கரை மேல் பகுதியில் துவிக்கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சை தூண்டை உதட்டில் வைத்து நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும்.
பயன்கள் நீங்கள் எலுமிச்சையை வைத்து உங்களது உதட்டில் ஸ்கிரப் செய்வதினால், உங்களது உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, உங்களது உதடுகள் புத்துணர்வு பெரும். புதிதான பிரஷ் ஆன உதடுகள் வெளிப்படும். இதனை தினமும் ஒரு முறை என சில வாரங்களுக்கு செய்து வர வேண்டும். இவ்வாறு விடாமல் செய்து வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
எளிமையான வழி நீங்கள் உங்களது கருமையான கவர்ச்சியற்ற உதடுகளை பிங்க் நிறத்தில் பிறர் கண்டு வியக்கும் வண்ணமாக மாற்ற மற்றொரு எளிமையான வழியும் உள்ளது. அது என்னவென்றால், முதலில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை ஒரு பௌளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன், சிறிதளவு கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை நீங்கள் மிக்ஸ் செய்து வைத்திருந்த எலுமிச்சை, கிளிசரின் மற்றும் தேன் கலந்த கலவையை, ஒரு காட்டன் பஞ்சால் தொட்டு உங்களது உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இதனை இரவில் தூங்கும் முன்னர் செய்வது மிகச்சிறந்த பலனை கொடுக்கும். இதனை நீங்கள் தொடர்ந்து பலன் கிடைக்கும் வரை செய்து வருவது சிறப்பு.
பீட்ரூட் உதடுகள் சிவப்பாக மாற பீட்ருட் மற்றும் மாதுளம் மிகவும் உதவியாக இருக்கும். பீட்ரூட் உதடுகளை சிவப்பாகுவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் மிக விரைவிலேயே கவர்ச்சியாக மாறும்.
இதை செய்யாதீர் உதடுகள் வறட்சியாக இருந்தால், நாம் அடிக்கடி உதட்டை ஈரம் செய்து கொள்வது வழக்கமாகும். ஆனால் இப்படி அடிக்கடி நாம் எச்சிலில் உதடுகளை ஈரம் செய்து கொண்டிருந்தால், எச்சிலில் உள்ள பாக்டீரியாக்கள் உதடுகளின் மீது பட்டு உதடுகளில் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இதனை செய்யாமல் இருப்பது நல்லது.
வறட்சியை தடுக்க! உதடுகளில் எச்சிலால் நனைக்காமல் எப்படி உதடுகளின் ஈரப்பதத்தை காப்பாற்றுவது என்று உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். அதற்கான பதில் தான் இது… நீங்கள் தினமும் அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களது உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடனேயே இருக்கும். மேலும் சத்தான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். அதுவும் குறிப்பாக தண்ணீர் அதிகமாக உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
கொத்தமல்லி இலை கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும். கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிர ந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும். கருமையான உதடு சிவப்பாக: பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.
ஆரஞ்ச் தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும். ஆரஞ்சும் ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், இதுவும் எலுமிச்சைக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. உதட்டில் அரை ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு சிவப்பாகும்.
பிற பயன்கள் வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பிறவும் சிறிதளவில் கலந்துள்ளன. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் உள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது.