வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், சருமத்தில் உள்ள ரோமங்கள் நீங்குவதோடு, இறந்த செல்களும் நீங்கி, சருமம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை 1
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, சர்க்கரை பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை 2
பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
செய்முறை 3
பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைக்க வேண்டும். இப்படி ஒரு 2-3 லேயர் போட வேண்டும்.
செய்முறை 4
பின் 30 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், முடி நீங்குவதோடு, அப்பகுதியும் பளிச்சென்று இருக்கும்.