30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
massage image
சரும பராமரிப்பு

உங்கள் உடல் வலிக்கும் மற்றும் நிம்மதியான உறக்கத்திற்கும் பாடி மசாஜ்

சரியான செய்முறைகளையும் அறிந்து கொண்டால் வீட்டிலேயே நீங்களாகவே பாடி மசாஜ் செய்ய முடியும் என்பது சாத்தியமே.

பாடி மசாஜ் என்பது எண்ணெய் மற்றும் மாய்ஸ்சரைசர் அப்ளே பண்ணுவதல்ல. அந்த பொருட்களை உடலின் எந்த பகுதியில் அப்ளே பண்ணி மசாஜ் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இதனால் இறுதியில் ஒரு புத்துணர்ச்சி கண்டிப்பாக கிடைக்கும்.

குழந்தைகளுக்கு மசாஜ் மூலம் கிடைக்கும் நன்மைகள் !

சில தடவுதல், தட்டுதல், பிசைதல் போன்ற முறைகளை சரியாக செய்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை மிளிரச் செய்ய வேண்டும். வீட்டிலேயே இந்த பாடி மசாஜ் செய்வதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. சரி வாங்க பாடி மசாஜ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முறை 1
முதலில் பாடி மசாஜ் செய்வதற்கு அதிக தண்ணீர் அடங்கியுள்ள எதாவது லோசனை எடுத்துக் கொள்ளவும். மேலும் கேரியர் ஆயிலையும் எடுத்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் (உங்களுக்கு இருமல் மற்றும் சளி இருந்தால்) அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவும். இதை வெதுவெதுப்பான தன்மையில் வைத்து பயன்படுத்தவும்.

முறை 2
சூடான ஆயில் மசாஜ் மேற்கொண்டால் உங்களை சுத்தி யாரும் இல்லாமல் அல்லது தனிப்பட்ட அறையில் வைத்து செய்யவும். ஏனெனில் இது குறைவான உடையில் செய்ய வேண்டியது இருக்கும்.

முறை 3
முதலில் மசாஜ்யை உங்கள் பாதங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஆயிலை உங்கள் கைவிரல்களால் எடுத்து பாத விரல்களை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும் பிறகு ஆயிலை உங்கள் உள்ளங் கைகளில் தடவிக் கொண்டு பாதங்களின் நடுப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜை நேரான முறையில் அதாவது கால்களிலிருந்து பாதம் என்ற முறையில் செய்ய வேண்டும். பாதத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை மெதுவாக குறைந்தது ஒரு பாதத்திற்கு 5 நிமிடங்கள் கணக்கில் மசாஜ் செய்ய வேண்டும். ஆயில் ஊறி விட்டு என்றால் மேலும் சிறிது ஆயில் எடுத்து கொள்ளவும்.
massage image
முறை 4
பாதங்களுக்கு 2 அல்லது 3 முறை செய்த பிறகு மூட்டுப் பகுதிக்கு வரவும். உங்களுக்கு இந்த பகுதியில் வலி இல்லாவிட்டாலும் ஒட்டு மொத்த உடலுக்கும் இரத்த ஓட்டத்திற்கான மையப் பகுதி ஆகும். உங்களது இரு கைகளிலும் ஆயிலை எடுத்து கொண்டு மூட்டுகளை வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பட்டும் படாமல் லேசாக மசாஜ் செய்தால் போதுமானது. அதற்காக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டாம்.

முறை 5
மூட்டுப் பகுதி முடிந்த பிறகு நேராக தொடையின் கீழ் பகுதிக்கு வரவும். இந்த பகுதிக்கு அதிகமான ஆயில் தேவைப்படும். தொடையின் கீழ் பகுதியை வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்து விட்டு மேல் பகுதிக்கு வரவும். தொடையின் உட்பகுதிக்கு மிகுந்த கவனம் எடுத்து கொள்ளவும். தொடை மசாஜ்யை நேரான முறையில் அதாவது மூட்டுகளிலிருந்து டம்மி வரை இழுத்து மசாஜ் செய்யவும்.

முறை 6
அடிவயிற்றுப் பகுதிக்கு கொஞ்சம் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டும். தேவையான அளவு ஆயிலை எடுத்துக் கொண்டு வட்ட வடிவ இயக்கத்தில் அடி வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். ஆயிலை மார்பின் நடுப்பகுதியில் தடவி அப்படியே பரப்ப வேண்டும். அடிவயிற்றிப் பகுதியை முழுவதுமாக கவர் பண்ண கொஞ்சம் நேரம் எடுக்கும்.

முறை 7
கடைசியாக இப்பொழுது உங்கள் தோள்பட்டைக்கு செல்ல வேண்டும். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வலது தோள்பட்டையை இடது கைகளாலும் அதே மாதிரி மற்றதையும் செய்ய வேண்டும். கழுத்தின் நடுப்பகுதியில் இருந்து தோள்பட்டையின் விளிம்பு வரைக்கும் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். கைகளுக்கு வரும் போது நேரான மசாஜ் முறையை மேற்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளிலிருந்து தோள்பட்டை வரை மசாஜ் செய்ய வேண்டும். நீண்ட தடவுதலை மேற்கொள்ளாமல் சமமான நேரான முறையை மேற்கொள்ள வேண்டும்.

முறை 8
இறுதியாக உங்கள் உள்ளங்கைகளை மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் உள்ளங்கைகளை நீங்களே மசாஜ் செய்வதற்கு ஆயிலை அப்ளே செய்து ஒரு நேரத்தில் ஒன்னு என்கிற முறையில் மசாஜ் செய்யவும்.

Related posts

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா அழகுக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?

nathan

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

nathan

சருமத்தை க்ளீன் அண்ட் கிளியரா வச்சுக்க என்ன பண்ணலாம்?

nathan

மண் தரும் அழகு

nathan

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான முறையில் குளித்தல் எப்படி?

nathan

பெண்களின் சருமத்தை அழகூட்டும் இயற்கை பொருட்கள்

nathan

பிரசவ தழும்புகளை சரி செய்வது எப்படி?.!!

nathan